'தைவான் ஒரு நாடு': ஜப்பான் பிரதமரால் சினமடைந்த சீனா

'தைவான் ஒரு நாடு': ஜப்பான் பிரதமரால் சினமடைந்த சீனா

1 mins read
42ab190a-aa30-4169-9f18-260ab1bcbf18
-

தோக்கியோ: அண்மையில் ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியின்போது 'தைவான் ஒரு நாடு' என்று ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா குறிப்பிட்டதால் சீனா ஆத்திரம் அடைந்தது.

"தைவானை ஒரு நாடாகக் கருதமாட்டோம் என்று ஜப்பான் அளித்த உறுதிமொழியை மீறுவதாக திரு சுகாவின் கூற்று இருக்கிறது. அது, சீனா-ஜப்பான் இடையிலான அரசதந்திர உறவுகளின் அடித் தளத்தையும் கீழறுக்கும் வகையில் அச்சுறுத்தலாக அமைந்துவிட்டது," என்று சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் குறிப்பிட்டார்.

இருப்பினும், தைவான் உடனான அரசு சாரா, நடை முறை உறவைத் தொடர்வதில் தங்களது அடிப்படை நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று ஜப்பானிய அரசாங்கத்தின் பேச்சாளர் கட்சுனோபு காட்டோ கூறி இருக்கிறார்.