இந்து, புத்த சமயச் சிலைகள் உட்பட திருட்டுப்போன 27 பழங்காலக் கலைச்சின்னங்களை அமெரிக்கா, கம்போடியாவிற்குத் திரும்ப அனுப்பி வைத்தது. இவற்றின் மொத்த மதிப்பு
3.8 மில்லியன் அமெரிக்க டாலர் (S$5 மில்லியன்) எனக் கூறப் பட்டது. திரும்பக் கிடைத்த கலைப்பொருள்கள், தங்கள் மூதாதையரின் 'தொலைந்து போன ஆன்மாக்கள்' என்றார் கம்போடிய கலாசார, கவின் கலைகள் துறை அமைச்சர் ஃபோயர்ங் சக்கோனா. மேன்ஹாட்டன் பழமைச் சின்னக் கடத்தல் தடுப்புப் பிரிவும் உள்நாட்டுப் பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவும் கிட்டத்தட்ட 400 கலைப்பொருள்களைப் பத்து நாடுகளுக்குத் திரும்ப அனுப்பி வைத்தது. படம்: ராய்ட்டர்ஸ்