தடுப்பூசி போட மறுப்போரின் கைபேசி சேவை முடக்கப்படும்

இஸ்­லா­மா­பாத்: கொவிட்-19 தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள மறுப்­ப­வர்­களின் கைபேசி சேவை முடக்­கப்­படும் என்று பாகிஸ்­தா­னின் பஞ்­சாப் மாநி­லம் அறி­வித்­துள்­ளது.

பல வார கடும் கட்­டுப்­பா­டு­களுக்­குப் பிறகு, பாகிஸ்­தா­னில் கொரோனா மூன்­றா­வது அலை மட்­டுப்­ப­டத் தொடங்­கி­யுள்­ளது. இருப்பினும், அங்கு அதிக மக்கள்­ தொகை கொண்ட பஞ்­சாப் மாநிலத்­தில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வது குறைந்து வரு­கிறது.

"தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள மக்­கள் பெரி­தும் தயங்­கு­வ­தால் கைபேசி சேவையை முடக்­கு­வது என முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளது," என்­றார் பஞ்­சாப் ஆரம்ப சுகா­தாரத் துறை பேச்­சா­ளர் ஹம்­மத் ரஸா.

மொத்­தம் 220 மில்­லி­யன் மக்கள்­தொ­கை­ கொண்ட பாகிஸ்­தானில் இதுவரை 10.5 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. பெரும்பாலும் சீனாவிலிருந்தே தடுப்பூசிகள் பெறப்படுகின்றன.

தடுப்­பூ­சி­யால் ஏற்­படும் பக்க விளை­வு­கள் குறித்த கவ­லை­களு­டன், மலட்­டுத்­தன்மை ஏற்­படும் என்­றும் ஈராண்­டு­க­ளுக்­குள் உயிரிழக்க நேரி­டும் என்­றும் வதந்தி பரப்­பப்­ப­டு­வ­தால் அங்கு தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளப் பல­ரும் தயங்­கு­வ­தா­கச் சொல்­லப்­படு­கிறது.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள மறுக்­கும் அர­சாங்க ஊழி­யர்­களுக்கு ஜூலை மாதம் முதல் ஊதி­யம் வழங்­கப்­ப­டாது என்று ஏற்­கெ­னவே சிந்து மாநி­லம் அறி­வித்­தி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!