ஆயிரக்கணக்கான சட்டவிரோத இந்தோனீசிய குடியேறிகளை நாடுகடத்தவிருக்கும் மலேசியா

ஜகார்த்தா: மலே­சி­யா­வில் இருந்து நாடு­க­டத்­தப்­ப­ட­வுள்ள ஆயி­ரக்­கணக்­கான இந்­தோ­னீ­சி­யர்­களை வர­வேற்க அந்­நாடு ஆயத்­த­மாகி வரு­கிறது.

இந்­தோ­னீ­சியா, மியன்­மார், நேப்­பா­ளம், பங்­ளா­தேஷ் ஆகிய நாடு­களைச் சேர்ந்த மில்­லி­யன்­க­ணக்­கான ஊழியர்கள் முறை­யான ஆவ­ணங்­கள் இன்றி மலே­சி­யா­வில் தங்­கி­யுள்­ள­தா­க­வும் அவர்­கள் பெரும்­பா­லும் தோட்­டம், கட்­டு­மானம், உற்­பத்தி ஆகிய துறை­களில் வேலை­செய்­து வருவதாகவும் சொல்­லப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், இப்­போ­தைய கொவிட்-19 பர­வல் சூழ­லில் தனது பிடியை இறுக்­கி­யுள்ள மலே­சியா, அவ்­வப்­போது அதி­ர­டிச் சோத­னை­களை மேற்­கொண்டு, முறையான ஆவ­ணங்­க­ள் இல்லாமல் தங்­கி­இருக்கும் வெளி­நாட்­ட­வர்­க­ளைக் கைது­செய்து, அவர்­களை நாடு­கடத்தி வரு­கிறது.

இதைத் தொடர்ந்து, எளி­தில் பாதிக்­கப்­பட வாய்ப்­புள்­ளோரை முத­லில் திருப்பியனுப்பும்படி இந்­தோ­னீ­சியா கேட்­டுக்­கொண்­டுள்­ளது.

அந்த வகையில், தடுப்பு மையங்­களில் இருக்­கும் பெண்­கள், குழந்­தை­கள் உட்­பட ஏறக்­கு­றைய 7,200 பேரை மலே­சியா திருப்­பி­ய­னுப்ப இருப்­ப­தாக இந்­தோ­னீசிய மனி­த­வள மேம்­பாட்டு ஒருங்­கி­ணைப்பு அமைச்­சர் ஃபெமி இகா கார்த்­திகா புத்ரி தெரி­வித்­துள்­ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!