தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கள்ளத்தனமாக நுழைய முயன்ற சீனர் சிக்கினார்

2 mins read
c3c6a945-80bd-4da5-922e-df4ba3eb1a29
எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் பிடிபட்ட ஹன் ஜுன்வெய்யும் கைப்பற்றப்பட்ட பொருள்களும். படம்: இந்திய ஊடகம் -

கோல்கத்தா: பங்­ளா­தே­ஷ் வழியாக சட்­ட­வி­ரோ­த­மாக இந்­தி­யா­வி­னுள் நுழைய முயன்ற சீன ஆட­வர், மேற்கு வங்­கம், மால்டா பகு­தி­யில் எல்­லைப் பாது­காப்­புப் படை­யி­ன­ரிடம் பிடி­பட்­டார்.

ஹன் ஜுன்­வெய் என்ற இந்த ஆட­வர், 2010ல் ஹைத­ரா­பாத், 2019க்குப் பின் மும்­முறை டெல்லி-குர்­கான் என இதற்­கு­முன் நான்கு முறை இந்­தியா வந்து சென்­ற­தாக விசா­ரணை அதி­கா­ரி­க­ளி­டம் தெரி­வித்­தார்.

ஆப்­பிள் மடிக்­க­ணினி, இரண்டு ஐஃபோன்­கள், ஒரு பங்­ளா­தேஷ் சிம் அட்டை, ஓர் இந்­திய சிம் அட்டை, இரண்டு சீன சிம் அட்­டை­கள், இரண்டு விர­லி­கள் ஆகி­யவை இவ­ரி­ட­மி­ருந்து கைப்­பற்­றப்­பட்­டன.

ஹன்­னும் அவ­ரின் கூட்­டா­ளி­களும் இதற்­கு­முன் 1,300 இந்­திய சிம் அட்­டை­களை உள்­ளா­டைக்­குள் மறைத்து வைத்து, சீனா­விற்கு எடுத்­துச் சென்­ற­தா­கக் கூறப்­பட்­டது. அவை கணக்­கு­களை முடக்­க­வும் வேறு­வி­த­மான நிதி முறை­கே­டு­க­ளுக்­கும் பயன்­ப­டுத்­தப்­பட்டு இருக்­க­லாம் எனச் சந்­தே­கிக்­கப்­படு­கிறது.

லக்னோ பயங்­க­ர­வா­தத் தடுப்­புப் படை­யி­ன­ரால் ஒரு வழக்­கில் தேடப்­பட்டு வந்­த­தால் ஹன்­னால் இந்­திய விசா பெற முடி­ய­வில்லை. அத­னால், பங்­ளா­தேஷ் விசா பெற்று, அதன்­பின் கள்­ளத்­த­ன­மாக இந்­தி­யா­விற்­குள் நுழைய இவர் முடி­வு­செய்­தார்.

பொட்டேலி பிரசாந்த் குமார் எனும் இந்தியருடன் இணைந்து, ஹைதராபாத்தில் இவர் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார்.

பின்­னர் இரு­வ­ரும் இணைந்து, 2019 அக்­டோ­ப­ரில் குர்­கா­னில் நூறு அறை­க­ளு­டன் கூடிய 'ஸ்டார் ஸ்பிரிங்' ஹோட்­டலை ஆண்­டுக்கு 15 லட்­ச ரூபாய் குத்­த­கைத் தொகைக்கு, பத்­தாண்டு குத்­த­கைக்கு எடுத்­த­னர். அந்த ஹோட்­ட­லின் பெரும்­பா­லான ஊழி­யர்­கள் சீனர்­கள் எனக் கூறப்­ப­டு­கிறது.

ஹன்னிடம் ஆதார் அட்டை இருந்ததால், சீனர் ஒருவரால் எப்படி ஆதார் அட்டை பெற முடிந்தது என விசாரிக்கப்பட்டு வருகிறது.