விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்

விரைவில் அமைச்சரவை விரிவாக்கம்

1 mins read
59599f46-607c-4f0e-93b6-ee9a4c90456f
-

புது­டெல்லி: இம்­மாத இறு­திக்குள் அல்­லது அடுத்த மாதத் தொடக்­கத்­தில் மத்­திய அமைச்­ச­ரவை விரிவு­ப­டுத்­தப்­ப­ட­லாம் எனத் தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

பிர­த­மர் நரேந்­திர மோடி தலை­மை­யி­லான இப்­போ­தைய அமைச்­ச­ர­வை­யில் 60 பேர் இடம்­பெற்­றுள்ள நிலை­யில், அந்த எண்­ணிக்கை 79ஆக உய­ரக்­கூ­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பிர­த­மர், உள்­துறை அமைச்­சர் அமித் ஷா, பாஜக தலை­வர் ஜே.பி.நட்டா ஆகி­யோர் கடந்த சில நாள்­களா­கப் பல்­வேறு அமைச்­சு­க­ளின் பணி­களை மறு­ஆய்வு செய்து வரு­வ­தாக 'லைவ் இந்­துஸ்­தான்' செய்தி கூறு­கிறது. அமைச்­ச­ரவை மாற்­றம் அல்­லது விரி­வாக்­கத்­திற்கு­முன் இத்­த­கைய மறு­ஆய்வு இடம்­பெ­று­வது வழக்­கம்.

இது­வரை 24 அமைச்­சர்­க­ளின் செயல்­பா­டு­கள் மறு­ஆய்வு செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் விரை­வில் எஞ்­சிய அமைச்­சர்­கள் தொடர்­பான மறு­ஆய்வு இடம்­பெ­றும் என்­றும் கூறப்­ப­டு­கிறது. முன்­னாள் அசாம் முதல்­வர் சர்­பா­னந்த சோனோ­வால், முன்­னாள் பீகார் துணை முதல்­வர் சுஷில் மோடி, ஜோதி­ரா­தித்ய சிந்­தியா எம்.பி. ஆகி­யோர்க்கு அமைச்­ச­ர­வை­யில் இடம் கிடைக்­க­லாம் என எதிர்பார்க்கப்படுகிறது.