பாதிப்பு குறைவு, இறப்பு அதிகரிப்பு

பாதிப்பு குறைவு, இறப்பு அதிகரிப்பு

1 mins read
cb48a185-2ff3-49fb-9415-d225aaee3e20
-
Google News Preferred Icon

புதுடெல்லி: தொடர்ந்து 5வது நாளாக இந்தியாவில் புதிய கொவிட்-19 பாதிப்புகள் நூறாயிரத்திற்கும்கீழ் பதிவாகி உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 84,332 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. கடந்த 70 நாள்களில் இதுவே ஆகக் குறைவு. இதையடுத்து, மொத்த பாதிப்பு 29,359,155 ஆனது. ஆயினும், கிருமித்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் 4,002 பேர் மாண்டுபோக, மரண எண்ணிக்கை 367,081 ஆனது. பரிசோதனைகளில் தொற்று உறுதிப்படுத்தப்படும் விகிதம் 4.39 விழுக்காடாகப் பதிவானது. தொடர்ந்து 19 நாள்களாக இவ்விகிதம் பத்து விழுக்காட்டிற்குள் இருந்து வருகிறது. இதுவரை 249.6 மில்லியன் தடுப்பூசிகள் போடப் பட்டுள்ளன.