புனே: இந்தியாவில் முதல் முதலாக சுயமாக கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்ளும் கருவி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 'கொவிசெல்ஃப்' எனும் இந்தப் பரிசோதனைக் கருவியை 'மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ்' நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. 15 நிமிடங்களுக்குள் சோதனை முடிவு தெரிந்துவிடும். கைபேசிச் செயலி வழியாக பரிசோதனை விவரங்கள் நேரடியாக இந்திய மருத்துவ ஆய்வுக் கழகத்திற்கு அனுப்பப் பட்டுவிடும். 250 ரூபாய்க்கு இக்கருவி விற்கப்படுகிறது.
சுயபரிசோதனைக் கருவி அறிமுகம்
1 mins read
-

