இதுவரை 253 மில்லியன் தடுப்பூசி போடப்பட்டுள்ளது

1 mins read
0d56f0e2-3bd0-49d8-a2bc-bbd94a5d9e68
-

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தடுப்பூசி இயக்கத்தில் முக்கியமான மைல்கல் எட்டப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் சனிக்கிழமை இரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின்படி, இதுவரை 252.8 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டு இருப்பதாக மத்திய அமைச்சு கூறியது.

ஒரு முறை ஊசி போட்டுக் கொண்டு உள்ளோர் 204.6 மில்லியன் பேர் என்றும் தடுப்பூசி இயக்கம் தொய்வின்றி நடப்பதாகவும் அது கூறியது.