நாடு முழுவதும் 50 தற்காலிக துணை மருத்துவமனைகள்

நாடு முழுவதும் 50 தற்காலிக துணை மருத்துவமனைகள்

2 mins read
e976bf66-f4d5-44bf-b072-785c473ba253
-

நவீன வசதிகள், தீவிர சிகிச்சைப் பிரிவுடன் அமைக்க மத்திய அரசு முடிவு

புது­டெல்லி: கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு சிகிச்சை அளிக்க நாடு முழு­வ­தும் நவீன வச­தி­க­ளு­டன் கூடிய ஐம்­பது தற்­கா­லிக துணை மருத்­து­வ­ம­னை­கள் அமைக்­கப்­படும் என மத்­திய அர­சுத் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தற்­போது கிரா­மப்­பு­றங்­க­ளி­லும் கொரோனா தொற்­றுப் பாதிப்பு பரவி உள்­ளது. இந்­நி­லை­யில் மருத்துவ வச­தி­க­ளைப் பொறுத்­த­வரையில் கிராமப்­பு­றங்­க­ளுக்­கும் நகர்ப்­பு­றங்­க­ளுக்­கும் இடையே பெரும் இடை­வெளி நில­வு­கிறது.

இந்த இடை­வெ­ளி­யைப் போக்கும் வகை­யில் இந்­தப் புதிய தற்­கா­லிக துணை மருத்­து­வ­மனைகள் அமைக்­கப்­பட உள்­ள­தாக டைம்ஸ் ஆஃப் இந்­தியா செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

100 படுக்­கை­க­ளைக் கொண்­ட­தாக இந்த மருத்­து­வ­ம­னை­களை அமைக்க மூன்று வாரங்­கள் தேவைப்­படும் என்­றும் தீவிர சிகிச்சைப் பிரி­வுக்­கும் இடம் ஒதுக்­கப்­படும் என்­றும் நிபு­ணர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

பின்­னர் இம்­ம­ருத்­து­வ­ம­னை­கள் முழு­மை­யான செயல்­பாட்­டுக்கு வர ஆறு முதல் ஏழு வாரங்­கள் ஆகும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பிர­த­ம­ரின் முதன்மை அறி­வி­யல் ஆலோ­ச­கர் விஜய் ராக­வன் இத்­திட்­டத்தை முன்­னெ­டுத்­துள்­ளார். முதற்­கட்­ட­மாக மாநில அர­சுக்­கு உட்­பட்ட மருத்­து­வ­ம­னை­களில் இத்­திட்­டம் செயல்­ப­டுத்­தப்­பட உள்­ளது.

கொரோனா மூன்­றா­வது அலை வரும் என எதிர்­பார்க்­கப்­படும் சூழ­லில் அதை எதிர்­கொள்­ளும் விதமாக மத்­திய அரசு இத்­திட்­டத்­தைச் செயல்­ப­டுத்­து­கிறது.

மின்­வ­சதி, தண்­ணீர் விநி­யோ­கம், உயிர்­வாயு குழாய் அமைப்பு ஆகிய வச­தி­க­ளைக் கொண்­டுள்ள எந்த ஓர் அரசு மருத்­து­வ­ம­னை­யும் இந்த தற்­கா­லிக துணை மருத்துவ­மனைகளை அமைக்­க ­மு­டி­யும் என்று அறி­வி­யல் ஆலோ­ச­கர் அலு­வ­ல­கத்­தின் உறுப்­பி­ன­ரான ஆதிதி லீலே தெரி­வித்­துள்­ளார்.

இந்­தத் துணை மருத்­து­வ­மனை­கள் தற்­போது முழு­வீச்­சில் இயங்கி வரும் பெரிய மருத்­து­வ­மனை­களின் வளா­கத்தை ஒட்டி நிறு­வப்­ப­டு­கின்­றன.

கொரோனா தொற்று பாதிப்பு அதி­க­முள்ள மாநி­லங்­கள் இத்­திட்­டத்­தின் மூலம் பய­ன­டை­ய­லாம் என்­றும் துணை மருத்­து­வ­ம­னை­கள் அமைப்­ப­தற்­கான தேவை உள்­ளதா என்­ப­தைக் கண்­ட­றி­யு­மா­றும் மத்­திய அரசு கேட்­டுக் கொண்­டுள்­ளது.

முதற்­கட்­ட­மாக சட்­டீஸ்­கர் மாநிலத்­தில் உள்ள பிலாஸ்­பூர் நகர், மகா­ராஷ்­டி­ரா­வில் உள்ள அமராவதி, புனே, ஜால்னா நக­ரங்­களில் 100 படுக்­கை­கள் கொண்ட துணை மருத்­து­வ­ம­னை­கள் அமைக்­கப்­பட உள்­ளன.

பஞ்­சாப், சட்­டீஸ்­கர் மாநிலங்­களில் 20, 50 படுக்­கை­கள் கொண்ட துணை மருத்­து­வ­மனை­களை அமைக்­க­வும் முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

இனி­மே­லும் துணை மருத்து­வ­மனை­கள் தேவை இல்லை எனக் கரு­தி­னால், அவற்றை அகற்றி­விட இய­லும். மேலும் ஒரே வாரத்­தில் வேறோர் இடத்­தில் அம்­ம­ருத்துவமனையை மீண்­டும் நிறுவ முடி­யும் என்­றும் நிபு­ணர்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.