மகாராஷ்டிராவில் கறுப்புப் பூஞ்சை நோய்க்கு 644 பேர் பலி

மகாராஷ்டிராவில் கறுப்புப் பூஞ்சை நோய்க்கு 644 பேர் பலி

1 mins read
b392bb54-b7b1-4b84-9165-f3e8a077967b
-

மும்பை: மகா­ராஷ்­டி­ரா­வில் கறுப்­புப் பூஞ்சை நோய் பாதிப்­பால் 7,395 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இந்­நோய்க்கு இது­வரை 644 பேர் பலியாகிவிட்டதாக அம்­மாநில சுகா­தா­ரத் துறை தெரி­வித்­துள்­ளது.

கொரோனா கிரு­மித்­தொற்றை அடுத்து இப்­போது கறுப்­புப் பூஞ்சை நோய் பொது­மக்­களை அச்­சு­றுத்தி வரு­கிறது.

நாடு முழு­வ­தும் பல்வேறு மாநிலங்­களில் இந்த நோய்த்­தாக்­கம் இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

ராஜஸ்தான்,தெலுங்கானா, ஒடிசா, குஜ­ராத், பஞ்­சாப், ஹரி­யானா, கர்­நா­டகா, பீகார், மத்தி­யப் ­பி­ர­தே­சம் உள்­ளிட்ட பல மாநிலங்­களில் பூஞ்சை நோயா­னது இந்தியத் தொற்­று­நோய் சட்­டத்­தின் கீழ் அறி­விக்­கப்­பட்ட தொற்­று­ நோயாக உள்­ளது.

மகா­ராஷ்­டி­ரா­வில் இந்­நோ­யால் பாதிக்­கப்­ப­டு­வோர் எண்­ணிக்கை தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது. இது­வரை 2,212 பேர் குண­ம­டைந்­துள்­ள­னர். 4,463 பேர் தற்­போது சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். புனே, அவு­ரங்­கா­பாத், நாக்­பூர், நாசிக் ஆகிய மாவட்­டங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள்­தான் அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக சுகா­தா­ரத் துறை தெரி­வித்­துள்­ளது.

இதற்­கி­டையே கறுப்­புப் பூஞ்சை நோய்த் தாக்­கம் அதி­க­முள்ள மாநி­லங்­க­ளுக்கு அந்­நோய்க்­குச் சிகிச்சை அளிக்க உத­வும் மருந்­து­களை போது­மான அள­வில் அனுப்பி வைக்க ஏற்­பாடு செய்­துள்­ள­தாக மத்­திய சுகா­தார அமைச்சு அண்­மை­யில் தெரி­வித்­தி­ருந்­தது.