உலகின் ஆகப்பெரிய குடும்பத்தின் தலைவர் காலமானார்

ஐஸ்வால்: உல­கின் ஆகப் பெரிய குடும்­பத்­தின் தலை­வர் எனக் கரு­தப்­படும் 76 வய­தான சியோங்­ககா அகா சியோன் நேற்று முன்­தி­னம் கால­மா­னார்.

அண்­மைக் கால­மாக அவர் உடல்­ந­லம் குன்­றி­யி­ருந்­தார் என்­றும் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­ட­போது வழி­யி­லேயே அவர் இறந்­து­விட்­ட­தா­க­வும் குடும்­பத்­தார் தெரி­வித்­துள்­ள­னர்.

சியோங்­க­கா­வுக்கு மொத்­தம் 39 மனை­வி­கள், 94 பிள்­ளை­கள் உள்­ள­னர். மேலும் 33 பேரன் பேத்­தி­களும் இருப்­ப­தாக ஊட­கங்­கள் தெரி­வித்­துள்­ளன.

இவ­ரது வம்­சா­வ­ழி­யில் ஆண்­கள் பல­தார திரு­ம­ணம் செய்­து­கொள்ள அனு­மதி உண்டு. இத­னால் அவர் பல பெண்­க­ளைத் திரு­ம­ணம் செய்­து­கொண்­டுள்­ளார்.

இதன்­மூ­லம் உல­கத்­தின் ஆகப் பெரிய குடும்­பத்­தின் தலை­வர் என்ற பெருமை இவ­ருக்­குக் கிடைத்­த­தாக உள்­ளூர் மக்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில் நீரி­ழிவு, உயர் ரத்த அழுத்­தப் பிரச்­சி­னை­யால் பாதிக்­கப்­பட்ட அவ­ருக்கு வீட்­டி­லேயே சிகிச்சை அளிக்­கப்­பட்டு வந்­தது. எனி­னும் சிகிச்சை பல­னின்றி அவர் கால­மா­னார்.

அவ­ரது மறை­வுக்கு மிசோ­ராம் முதல்­வர் சோரம் தங்கா இரங்­கல் தெரி­வித்­துள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!