72 நாள்களுக்குப் பின் 70,000ஆக குறைந்த தொற்று

72 நாள்களுக்குப் பின் 70,000ஆக குறைந்த தொற்று

1 mins read
d338e3a1-820a-42f6-98a3-fefa6a04114e
-

புதுடெல்லி: 72 நாள்களுக்குப் பிறகு இந்தியாவில் ஆகக் குறைவான தொற்று பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி உள்ளது.

நேற்று முன்தினம் புதிதாக 70,421 பேரை கிருமி தொற்றி உள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஒரு மில்லியனுக்கும் குறைவாக உள்ளது என மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளையில் நேற்று முன்தினம் 3,921 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனர் என்றும் அந்த அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே தொற்று பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் மேலும் பல ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளன.