ஜம்முவில் ஏழுமலையான் திருக்கோவில்

ஜம்முவில் ஏழுமலையான் திருக்கோவில்

1 mins read
0614d44f-6748-48db-9563-8096d8fd3017
-

ஸ்ரீந­கர்: ஜம்­மு­வில் உள்ள மஜ்­லின் கிரா­மத்­தில் திருப்­பதி ஏழு­ம­லை­யான் கோவில் கட்­டப்­ப­டு­கிறது.

இதற்­கான பூமி பூசை நேற்று முன்­தி­னம் அக்­கி­ரா­மத்­தில் நடை­பெற்­றது.

மொத்­தம் 62 ஏக்­கர் நிலத்­தில் அமைக்­கப்­பட உள்ள இக்­கோ­விலை திரு­மலை திருப்­பதி தேவஸ்­தா­னம் கட்­டு­கிறது. 60 ஏக்­கர் நிலத்தை காஷ்­மீர் அரசு 40 ஆண்டு கால குத்­த­கைக்கு வழங்கி உள்­ள­தா­க­வும் கோவில் கட்­டு­மா­னப் பணி­கள் 18 மாதங்­களில் முடி­வ­டை­யும் என்­றும் திருப்­பதி தேவஸ்­தா­னம் தெரி­வித்­துள்­ளது.

பூமி பூசை நிகழ்­வில் காஷ்­மீர் ஆளு­நர் மனோஜ் சின்ஹா பங்­கேற்­றார். அப்­போது மாதா வைஷ்­ணவ் தேவி மண்­ணில் ஏழு­ம­லை­யான் கோவில் அமை­ய­வேண்­டும் என்ற காஷ்­மீர், வட இந்­திய மக்­க­ளின் நீண்­ட­நாள் ஆசை நிறை­வேற இருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார்.

புதி­தாக அமை­ய­ உள்ள கோவி­லில் வேத பாட­சாலை, விடுதி, திரு­மண மண்­ட­பம், பக்­தர்­கள் தங்­கு­மி­டம் உள்­ளிட்ட வச­தி­கள் இருக்­கும் என்­றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. மிக விரைவில் கட்டுமானப் பணிகள் வேகமெடுக்கும் என்றும் குறித்த காலக்கெடுவுக்குள் பணிகள் முடிவடையும் என்றும் திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.