போபால்: பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக இந்தியா வந்துள்ள 5 ஆயிரம் இந்துக்களுக்கு இலவச தடுப்பூசி போடப்பட உள்ளதாக மத்தியப் பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.
5 ஆயிரம் சிறுபான்மை இந்துக்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய பின்னர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிந்து காலனி பகுதியில் வசித்து வருகின்றனர்.
தங்களுக்கும் இலவச தடுப்பூசி போடவேண்டும் என இந்துக்களின் பிரதிநிதிகள் மத்தியப் பிரதேச அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து அக்கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்து அகதிகள் தடுப்பூசி மையங்களில் தங்களுடைய கடப்பிதழ், அடையாள அட்டையைக் காண்பித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்தியப் பிரதேச சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

