ரூ.73 ஆயிரம் கோடியை இழந்த அதானி

ரூ.73 ஆயிரம் கோடியை இழந்த அதானி

1 mins read
f36d7a70-3e86-4b2f-b60b-2a61cedfa222
-

மும்பை: பங்குச்சந்தையில் ஏற்பட்ட திடீர் சரிவு காரணமாக தொழிலதிபர் கௌதம் அதானி, ரூ.73 ஆயிரம் கோடியை இழந்துள்ளதாக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இதனால் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தை இழக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதானியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ.5.64 லட்சம் கோடியாகும்.

அதானி குழுமங்களின் மொத்த சந்தை மூலதனம் ரூ.9.5 லட்சம் கோடியாக உள்ளது. இந்நிலையில் அதானி குழும பங்குகளின் விலைகள் திடீரென சரிந்தன.

இதனால் ஒரு மணி நேரத்தில் அவருக்கு ரூ.73,250 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.