கெஜ்ரிவால்: குஜராத்தில் போட்டியிடுவோம்

கெஜ்ரிவால்: குஜராத்தில் போட்டியிடுவோம்

2 mins read
71b19845-abc2-43fc-b6b9-fc624b555583
-

அக­ம­தா­பாத்: அடுத்த ஆண்டு நடை­பெற உள்ள குஜ­ராத் சட்­டப்­பே­ரவைத் தேர்­த­லில் ஆம் ஆத்மி கட்சி அனைத்து தொகு­தி­க­ளி­லும் போட்­டி­யி­டும் என அக்­கட்­சி­யின் ஒருங்­கி­ணைப்­பா­ள­ரும் டெல்லி முதல்­வ­ரு­மான அர­விந்த் கெஜ்­ரி­வால் தெரி­வித்­துள்­ளார்.

அக­ம­தா­பாத்­தில் கட்­சி­யின் புது அலு­வ­ல­கத்தை திறந்து வைத்த பின்­னர் கட்­சி­யி­னர் மத்­தி­யில் பேசி­ய­போது, குஜ­ராத்­தில் மாற்­றத்­துக்­கான நேரம் வந்­து­விட்­டது என்­றார்.

கடந்த ஏழு ஆண்­டு­க­ளுக்கு முன்பு டெல்லி மக்­க­ளுக்கு தம்மை யாரென்றே தெரி­யாது என்­றும் பின்­னர் தேர்­தல் மூலம் அங்கு நிலை­மையை மக்­கள் மாற்றி அமைத்­த­னர் என்­றும் கெஜ்­ரி­வால் நினை­வு­கூர்ந்­தார்.

"அதே­போல் குஜ­ராத் மாநி­லத்­தில் இருக்­கும் ஆறு கோடி மக்­களும் எதிர்­வ­ரும் சட்­டப்­பேரவைத் தேர்­தலில் அவர்­க­ளுக்­கான முகத்தை தேர்வு செய்­வார்­கள்.

"ஒரு காலத்­தில் தலை­ந­கர் டெல்­லியை ஆக்­கி­ர­மித்து இருந்­தது போன்று தற்­போது குஜ­ராத் மாநி­லத்­தை­யும் இரண்டு கட்­சி­கள் தங்­கள் வச­மாக வைத்­துக்­கொண்டு மாறி மாறி ஆட்சி செய்து வரு­கின்­றன," என்­றார் முதல்­வர் கெஜ்­ரி­வால்.

கடந்த 27 ஆண்­டு­க­ளாக குஜ­ராத்­தில் பாஜ ஆட்சி நடந்து வரு­வ­தா­கக் குறிப்­பிட்ட அவர், எதிர்க்­கட்­சி­யான காங்­கி­ரசோ பாஜ­வின் சட்­டைப் பையில் உள்­ளது என விமர்­சித்­தார்.

அண்­மை­யில் குஜ­ராத்­தில் நடை­பெற்ற உள்­ளாட்­சித் தேர்­த­லின்­போது, 120 உறுப்­பி­னர்­க­ளைக் கொண்ட சூரத் மாந­க­ராட்­சி­யில் ஆம் ஆத்மி கட்சி 27 இடங்­க­ளைக் கைப்­பற்­றி­யது.

இதன் மூலம் காங்­கி­ர­சுக்கு இணை­யான செல்­வாக்கு இருப்­பதை நிரூ­பித்­துள்­ள­தாக ஆம் ஆத்மி நிர்­வா­கி­கள் கூறு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் குஜ­ராத் தேர்­த­லில் தனித்து கள­மி­றங்­கப் போவதை நாசூக்­கா­கத் தெரி­வித்­துள்­ளார் முதல்­வர் கெஜ்­ரி­வால்.

தேர்தல் பணிகளையும் ஆம் ஆத்மி கட்சி இப்போதே தொடங்கி விட்டதாகத் தெரிகிறது.