2030க்குள் 26 மி. ஹெக்டர் நிலத்தை மீட்க இந்தியா உறுதி

1 mins read
d27281ce-8264-4e59-89c9-282c9514488d
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் சீர்­கெட்ட நிலை­யில் உள்ள 26 மில்­லி­யன் ஹெக்­டர் நிலங்­கள் வரும் 2030ஆம் ஆண்­டுக்­குள் மீட்­கப்­படும் என்று பிர­த­மர் நரேந்­திர மோடி உறு­தி­ய­ளித்­தார்.

பூமி பாலை­வ­ன­மாக மாறு­வ­தைத் தடுப்­ப­தற்­கான 14-வது ஐநா பொதுச் சபை மாநாட்­டில், அந்த­மாநாட்­டின் தலை­வர் என்ற முறை­யில் காணொளி வழி­யாக உரை­யாற்­றிய பிர­த­மர், மனி­தர்­க­ளுக்­கும் பூமிக்­கும் நீர்­ப்ப­ரப்பு எந்த அள­வுக்கு முக்­கி­யமோ அதே அள­வுக்கு நிலப்­பரப்­பும் முக்­கி­ய­மா­னது என்­பதை வலி­யு­றுத்­திக் கூறி­னார்.

இருந்­தா­லும் நீர்­நி­லை­க­ளின் பாது­காப்­பில் கவனம் செலுத்தப்படும் அள­வுக்கு நிலங்­க­ளில் அக்கறை காட்டப்ப­டு­வ­தில்லை என்ற திரு மோடி, இந்­தப் போக்கு மாற வேண்டும் என்­றும் சுற்­றுச்­சூ­ழ­லின் நிலைத்­தன்­மைக்­கும் பூமி வெப்­ப­மா­வ­தைச் சம­நி­லைப்­ப­டுத்­து­வ­தற்­கும் காடு­கள் அவ­சி­யம் என்­றார்.

இந்­தி­யா­வைப் பொறுத்­த­வரை, கடந்த 10 ஆண்­டு­களில் 30 லட்­சம் ஹெக்­டர் காட்டு வனப்­ப­ரப்பு கூடு­த­லாக உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­வித்த அவர், இத­னால் நாட்­டின் 4-ல் ஒரு பங்கு நிலப்­பரப்பு காட்­டுப்­ப­கு­தி­க­ளாக மாறி­யுள்ளது என்­றார்.

இந்­தி­யா­வில் சீர்­கேடு அடைந்­துள்ள 26 மில்­லி­யன் ஹெக்­டர் நிலங்­களை வரும் 2030ஆம் ஆண்­டுக்­குள் மீட்க அரசு உறு­தி­பூண்­டுள்­ள­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

இந்த இலக்கை இந்­தியா அடையும் பட்­சத்­தில், 3 பில்­லி­யன் டன் அள­வி­லான கரி­ய­மில வாயு­வின் வெளி­யேற்­றத்தை நாடு சமன் செய்ய முடி­யும் என்று திரு­ மோடி கூறி­னார்.