வாகனங்கள் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலி

வாகனங்கள் விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலி

1 mins read
ed17ae38-1ae7-4c6f-9174-4072364f7385
பத்து பேர் சென்ற சிறிய காரும் லாரியும் மோதின. படம்: இந்திய ஊடகம் -

அக­ம­தா­பாத்: இந்­தி­யா­வின் குஜ­ராத் மாநி­லத்­தில் ஆனந்த் மாவட்­டத்­தில் தாரா­பூர் நெடுஞ்­சா­லை­யில் நேற்று அதி­காலை நிகழ்ந்த விபத்­தில் ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்த 10 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

அந்­தக் குடும்­பத்தைச் சேர்ந்­த­வர்­கள் ஒரு காரில் சூரத்­தி­லி­ருந்து பாவ்­ந­கர் நோக்கிச் சென்றுகொண்­டி­ருந்­த­னர். இந்­தி­ர­னாஜ் என்ற கிரா­மம் அருகே கார் சென்றபோது எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் அது மோதி­யது.

இந்த விபத்­தில் இரண்டு பெண்­கள், ஏழு ஆண்­கள் மற்­றும் ஒரு குழந்தை சம்­பவ இடத்­தி­லேயே பலி­யா­னதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, குஜ­ராத் முதல்­வர் விஜய் ரூபானி மாவட்ட ஆட்சியரிடம் விபத்து குறித்து பேசி­யதாகவும் பாதிக்­கப்­பட்டவர்­க­ளின் குடும்­பத்­திற்கு உதவ அவர் உறுதி கூறியதாகவும் தகவல்கள் கூறின.

விபத்துக்கான காரணம் பற்றி புலன்விசாரணை நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.