கொரோனா 2வது அலை ஒடுங்குகிறது

கொரோனா 2வது அலை ஒடுங்குகிறது

2 mins read
f6b6dcae-86ee-4ad3-8816-4cae5c113f7e
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கொரோனா இரண்­டா­வது அலை மெல்ல மெல்ல குறைந்து வரு­கிறது.

நாட்டில் 9வது நாளாக நேற்று பாதிப்பு மேலும் குறைந்­தது. 70 நாட்­க­ளுக்­குப் பிறகு சிகிச்சை பெறு­வோ­ரின் எண்­ணிக்கை 9 லட்­சத்­துக்­கும் கீழ் குறைந்­து­விட்­டது.

புதி­தாக 62,224 பேருக்கு கொரோனா தொற்று உறு­தி­செய்­யப்­பட்டதாக­வும் 2,542 பேர் பலி­யா­ன­தா­க­வும் அதி­கா­ர­பூர்வ தக­வல்­கள் தெரி­வித்­தன. ஒரே நாளில் குண­மடைந்­த­வர்­கள் 107,628 பேர்.

மொத்த கிருமி பாதிப்பு எண்­ணிக்கை 2.96 கோடி என்­றும் மொத்த மரண எண்­ணிக்கை 379,573 என்­றும் தக­வல்­கள் தெரிவித்­தன. கொரோனா பாதிப்பு கார­ண­மாக இப்­போது 865,432 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர். இது­வரை போடப்­பட்ட தடுப்­பூ­சி­களின் எண்­ணிக்கை 26.19 கோடி எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

இத­னி­டையே, அறி­வி­யல்­பூர்வ ஆதா­ரத்­தின் அடிப்­ப­டை­யி­லேயே கோவி­ஷீல்டு தடுப்­பூசி இடை­வெளி அதி­க­ரிக்கப்பட்டதாக மத்­திய சுகா­தா­ரத்­துறை விளக்­கம் அளித்­தது.

கோவி­ஷீல்டு தடுப்­பூ­சி­யின் முதல் ஊசிக்­கும் இரண்­டாம் ஊசிக்­கும் உள்ள இடை­வெளி அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த இடை­வெளியை 12 வாரம் முதல் 16 வாரங்­கள் வரை நீட்­டிக்­க­லாம் என நிபு­ணர் குழு பரிந்­து­ரைத்­தது.

இரண்­டா­வது ஊசி 12-16 வாரங் களுக்­குள் வழங்­கப்­பட்­டால் கூடு­தல் பலன் கிடைப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டது. இதனை அடுத்து கோவி­ஷீல்டு தடுப்­பூ­சிக்­கான நெறி­முறை மாற்­றப்­பட்டு மக்­க­ளுக்­குப் போடப்­பட்டு வரு­கிறது.

ஆனால், கோவி­ஷீல்டு தடுப்­பூசி இடை­வெ­ளி­யைக் குறைத்­தால் பலன் அதி­க­மாக இருக்­கும் என ஆய்வு முடி­வு­கள் கூறு­வ­தாக அண்­மை­யில் செய்­தி­கள் வெளி­யா­யின.

இத­னால் கோவி­ஷீல்டு முதல் ஊசி­யைப் போட்­டுக்கொண்­ட­வர்­க­ளுக்கு 2-வது ஊசி போடு­வ­தில் குழப்­பம் தலை தூக்­கி­யது.

இதை­ய­டுத்து மத்­திய அரசு விளக்­கம் அளித்­தது.

கோவி­ஷீல்­டின் இரண்டு ஊசி களுக்கு இடை­யில் இடை­வெளியை அதி­க­ரிப்­பது தொடர்­பான முடிவு அறி­வி­யல் சான்­று­களின் அடிப்­படை­யில் எடுக்­கப்­பட்டதாக அரசு கூறியது.