சிவசேனா விமர்சனம்: பாஜக தொண்டர்கள் கொந்தளிப்பு

சிவசேனா விமர்சனம்: பாஜக தொண்டர்கள் கொந்தளிப்பு

1 mins read
5557f1b9-3434-4ae3-a8ec-921f30405482
-

மும்பை: அயோத்தி கோவில் அறக்­கட்­ட­ளை­யின் செயல்­பா­டு­களைக் கடு­மை­யாக விமர்­சித்­ததை அடுத்து சிவ­சேனா கட்­சிக்கு பாஜ­க­வி­னர் கடும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில் அயோத்தி ராமர் கோவி­லுக்­காக நிலம் வாங்­கப்­பட்­டது தொடர்­பான சர்ச்சை கார­ண­மாக இரு கட்­சி­யி­ன­ரும் நேற்று முன்­தி­னம் மோதிக்கொண்­ட­னர். இத­னால் மகா­ராஷ்­டி­ரா­வின் தாதர் பகு­தி­யில் பதற்­றம் நில­வி­யது.

அயோத்தி கோவில் அறக்­கட்­ட­ளை­யால் வாங்­கப்­பட்ட நிலம் தொடர்­பாக அண்­மை­யில் சர்ச்­சைக்­கு­ரிய சில தக­வல்­கள் வெளி­யா­கின. இது­கு­றித்து சிவ­சேனா கட்­சி­யின் அதி­கா­ர­பூர்வ நாளே­டான 'சாம்னா'வில் தலை­யங்­கம் வெளி­யா­னது. அதில் அயோத்தி கோவில் அறக்­கட்­டளை குறித்­துக் கடு­மை­யாக விமர்­சிக்­கப்­பட்­டி­ருந்­தது. இத­னால் பாஜ­க­வி­னர் கொந்­த­ளிப்­பில் உள்­ள­னர்.

இந்­நி­லை­யில் நேற்று முன்­தி­னம் தாதர் நக­ரில் உள்ள சிவ­சே­னா­வின் கட்சி அலு­வ­ல­கம் நோக்கி பாஜ­க­வின் இளை­யர் அணி­யி­னர் ஊர்­வ­ல­மா­கச் சென்­ற­னர். இது­கு­றித்து தக­வ­ல­றிந்த சிவ­சேனா கட்­சித் தொண்­டர்­களும் கட்சி அலு­வ­ல­கத்­தில் குவிந்­த­னர்.

இதை­ய­டுத்து இரு­த­ரப்­புக்­கும் இடையே கடும் வாக்­கு­வா­தம் மூண்­டது. அது பின்­னர் கைகலப்­பாக மாறி­யது. இரு­த­ரப்­பி­ன­ரும் ஒரு­வரை ஒரு­வர் தாக்­கிக்­கொண்­டதை அடுத்து போலி­சார் எச்­ச­ரிக்கை விடுத்தனர்.

அதன்­பி­றகு பாஜ­க­வி­னர் அங்­கி­ருந்து கலைந்து சென்­ற­னர்.