இரண்டாவது அலையில் கர்ப்பிணிகள் அதிகம் பாதிப்பு

இரண்டாவது அலையில் கர்ப்பிணிகள் அதிகம் பாதிப்பு

1 mins read
b61e37ed-a270-4611-8c8a-b58b397c10b0
-

புது­டெல்லி: கொரோனா இரண்­டா­வது அலை­யில் கர்ப்­பி­ணிப் பெண்­களும் அண்­மை­யில் குழந்தை பெற்­றெ­டுத்த தாய்­மார்­களும் அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக இந்­திய மருத்­துவ ஆராய்ச்சி மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

முதல் அலை­யு­டன் ஒப்­பி­டும்­போது இரண்­டா­வது அலை­யின் தாக்­கம் மிக அதி­க­மாக உள்­ளது என அந்த மன்­றம் தெரி­வித்­துள்­ளது.

எனவே, கர்ப்­பி­ணிப் பெண்­க­ளுக்­கும் தாய்­மார்­க­ளுக்­கும் தடுப்­பூசி போட­வேண்­டி­ய­தன் அவ­சி­யத்தை அண்­மைய புள்ளி விவ­ரங்­கள் தெரி­விப்­ப­தாக மருத்­துவ ஆராய்ச்சி மன்­றம் அறிக்கை ஒன்­றில் தெரி­வித்­துள்­ளது.

தொற்று பாதிப்­பால் கர்ப்­பி­ணிப் பெண்­களும் புதுத் தாய்­மார்­களும் இறக்­கும் விகி­தம் முதல் அலை­யில் 0.75 விழுக்­கா­டாக இருந்­தது. ஆனால் இரண்­டா­வது அலை­யில் இந்த இறப்பு விகி­த­மா­னது 5.7 விழுக்­கா­டாக அதி­க­ரித்­துள்­ளது.