பச்சை பூஞ்சை நோய்: ஆடவர் பாதிப்பு

பச்சை பூஞ்சை நோய்: ஆடவர் பாதிப்பு

1 mins read
edb7fbf8-8093-4921-beb4-01c65a614536
-

புது­டெல்லி: கொரோனா கிரு­மித்­தொற்­றில் இருந்து மீண்­ட­வர் பச்­சைப் பூஞ்சை நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தக­வல் வெளி­யாகி உள்­ளது. இந்­தி­யா­வில் முதன்­மு­றை­யாக ஒரு­வ­ருக்கு இத்­த­கைய பாதிப்பு ஏற்­பட்­டி­ருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

மத்­தி­யப் பிர­தே­சத்­தைச் சேர்ந்த ஆட­வர் ஒரு­வர் கடந்த இரு மாதங்­க­ளாக கொரோனா கிரு­மித்­தொற்­றுப் பாதிப்­புக்குச் சிகிச்சை பெற்று வந்­துள்­ளார். குண­ம­டைந்த பின்­னர் வீடு திரும்­பிய அவ­ருக்கு இரு வாரங்­க­ளுக்­குப் பிறகு திடீ­ரென காய்ச்­சல் ஏற்­பட்­டுள்­ளது.

மேலும் மூக்­கில் இருந்து ரத்­தம் வடிந்­ததை அடுத்து அவர் இந்­தூ­ரில் உள்ள மருத்­து­வ­ம­னைக்­குச் சென்­றுள்­ளார். கறுப்­புப் பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்­பட்­டி­ருக்­கும் என்று கருதி அவ­ருக்­குப் பரி­சோ­த­னை­கள் செய்­யப்­பட்­டன.

ஆனால் அதன் முடி­வில் அவ­ருக்கு பச்சை பூஞ்சை நோய் ஏற்­பட்­டி­ருப்­பது தெரி­ய­வந்­த­தாக அம்­ம­ருத்­து­வ­ம­னை­யின் இதய நோய்த் துறை தலை­வ­ரான மருத்து­வர் ரவி தோசி தெரி­வித்­துள்­ளார்.

"அனே­க­மாக இந்­தி­யா­வில் இவர்­தான் பச்­சைப் பூஞ்சை நோயால் பாதிக்­கப்­பட்ட முதல் நோயா­ளி­யாக இருக்­கக்­கூ­டும். இது அரி­தாக ஏற்­ப­டக்­கூ­டிய நோய். நுரை­யீ­ர­லைத் தாக்­கும் ஆபத்து உண்டு. கறுப்­புப் பூஞ்சை நோயைக் குணப்­ப­டுத்தும் மருந்து­க­ளைக் கொண்டு பச்­சைப் பூஞ்சை நோய்க்குச் சிகிச்சை அளிக்க இய­லாது," என்று மருத்து­வர் ரவி தோசி கூறி­யுள்­ளார்.

இதற்­கி­டையே பூஞ்சை நோய் எந்­தெந்த உடல் பாகங்­களை அதி­கம் பாதிக்­கும் என்­ப­தைத் தனித்தனியாக அடையாளம் காணும் பொருட்டு வண்­ணங்­க­ளின் பெய­ரால் இந்­நோய்­கள் குறிப்­பி­டப்­ப­டு­கின்­றன என்று டெல்லி எய்ம்ஸ் மருத்­து­வ­மனைத் தலை­வ­ரான மருத்­து­வர் ரன்­தீப் குலே­ரியா தெரி­வித்­துள்­ளார்.