கறுப்புப் பூஞ்சைத் தொற்றால் மூன்று சிறுவர்கள் பாதிப்பு உயிர் காக்க கண்ணை நீக்கிய மருத்துவர்கள்

மும்பை: கறுப்புப் பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்ட மூன்று சிறுவர்களின் ஒரு கண்ணை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அந்தக் குழந்தைகளின் உயிரை மருத்துவர்கள் காப்பாற்றி உள்ளனர்.

எனினும், சிறு வயதிலேயே குழந்தைகள் தொற்று பாதிப்பால் ஒரு கண்ணை இழந்துள்ளது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத் தலைநகர் மும்பையில் உள்ள ஃபோர்ட்டிஸ் மருத்துவமனை உள்ளிட்ட இரு மருத்துவமனைகளில் கறுப்புப் பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்ட நான்கு, ஆறு, பதினான்கு வயது டைய மூன்று சிறார்கள் அனு மதிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் 14 வயது குழந்தை யைத் தவிர மற்ற இருவருக்கும் நீரிழிவு பாதிப்பு இல்லை.

எனினும், மூவருமே கறுப்புப் பூஞ்சை நோயால் தீவிரமாக பாதிக் கப்பட்டிருந்த நிலையில், அது மேலும் பரவி மூளையைத் தாக்காமல் இருக்க கண்ணை அகற்றி அவர்களின் உயிரைக் காப்பாற்றி உள்ளதாக மருத்துவர்கள் ெதரிவித்து உள்ளனர்.

கொரோனா பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் விடுபடாத நிலை யில், அடுத்ததாக கறுப்புப் பூஞ்சை, வெள்ளைப் பூஞ்சை, பச்சைப் பூஞ்சை என விதவிதமான புதிய நோய்கள் பரவி வருவது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதுகுறித்து மூத்த மருத்துவர் ஜெசல் ஷெத் கூறுகையில், "கறுப்புப் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகள் எங்களிடம் வந்தனர். அவர்களில் 14 வயது சிறுமிக்கு 48 மணி நேரத்தில் கண்கள் கறுப்பு நிறத்தில் மாறத் தொடங்கியது. மூக்கிற்கும் கறுப்புப் பூஞ்சை பரவத் தொடங்கி யது. நல்ல வேளையாக அது மூளைக்குப் பரவவில்லை. அந்தச் சிறுமிக்கு ஆறு வாரங்கள் சிகிச்சை அளித்தோம். அவரது உயிரைக் காப்பாற்ற ஒரு கண்ணை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

"கறுப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் திசுக்கள் அகற்றப்படும். சரியான நேரத்தில் இவர்களுக்குச் சிகிச்சை அளிக்க வில்லை என்றால் உயிருக்கே கூட ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!