கங்கையில் மரப்பெட்டியில் மிதந்து வந்த 'கங்கை மகள்'

கங்கையில் மரப்பெட்டியில் மிதந்து வந்த 'கங்கை மகள்'

1 mins read
6e8b6582-2371-40c7-b3a2-b55a4b3e9af3
கங்கை நதியில் பச்சிளம் பெண் குழந்தையுடன் மிதந்து வந்த பெட்டி மீட்கப்படுகிறது. படம்: இந்திய ஊடகம் -

லக்னோ: கங்கை நதி­யில் ஆடி ஆடி மிதந்து வந்த மரப்­பெட்டி­யில் இருந்து பச்­சி­ளம் பெண் குழந்தை ஒன்று பத்­தி­ர­மாக மீட்­கப்­பட்­டது.

உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­தின் கங்கை நதி­யில் படகுப் போக்கு வரத்து செயல்பட்டு வருகிறது.

இங்குள்ள காஜி­புர் பகு­தி­யில் பட­கோட்டியாகப் பணி­யாற்றி வரும் குல்லு சௌத்ரி, தனது பணி முடிந்து வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்தபோது நதி­யில் ஒரு மரப்­பெட்டி மிதந்து வரு­வ­தைப் பார்த்­தார்.

அதை மீட்டு, திறந்து பார்த்த போது அத­னுள் ஒரு பெண் குழந்தை இருந்­தது. அதோடு குழந்­தை­யின் ஜாத­கம், துர்க்கையம்­ம­னின் புகைப்­ப­டங்­களும் இருந்­தன. குழந்­தை­யின் பெயர், 'கங்கை மகள்' என்றும் குறிப்­பி­டப்பட்­டி­ருந்­தது.

குழந்­தையை தனது வீட்­டுக்கு எடுத்­துச்சென்ற சௌத்ரி, அதை தானே வளர்க்­கப் போவ­தாக அக்­கம்­பக்­கத்தின­ரி­டம் கூறினார்.

இந்த தகவல் சமூக வலை­த்­தளங்­களில் பர­வி­ய­தைத் தொடர்ந்து, அதி­கா­ரி­கள் குழந்­தையை மீட்டு மாநில அர­சின் ஆஷா ஜோதி மையத்­தில் சேர்த்­த­னர்.

கங்கை தாய் எனக்குப் பரிசாக அளித்த குழந்தையை நானே என் உயிரினும் மேலாக வளர்ப்பேன்.

படகோட்டி குல்லு சௌத்ரி