‘இந்திய சட்டங்களுக்கு கீழ்ப்படிக’

டுவிட்டர் சமூக ஊடகத்தைக் கடுமையாகச் சாடி வலியுறுத்திய நாடாளுமன்றக் குழு

புது­டில்லி: டுவிட்­டர் நிறு­வ­னத்தை தங்­கள் நாட்­டின் சட்­டங்­க­ளுக்கு உட்­ப­டு­மாறு அதன் இந்­திய நிர்­வாகிக­ளி­டம் இந்திய நாடாளு மன்றக்குழு வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

இந்­தி­யா­வில் அந்­நாட்­டுச் சட்­டங்­களே ஆக உயர்­வா­னவை என்­றும் அக்­குழு கூறி­யது.

தக­வல் தொழில்­நுட்­பம் தொடர்­பி­லான இந்­திய நாடா­ளு­மன்­றக் குழு நேற்று முன்தினம் டுவிட்­டர் நிறு­வ­னத்­தின் நிர்­வா­கியை அழைத்து சுமார் ஒன்­றரை மணி நேரம் விசா­ரித்­தது.

இந்­தி­யா­வில் டுவிட்­டர் நிறு­வ­னத்­தின் அமைப்­பு­முறை, இப்­போ­தை­யச் சட்­டங்­களை நிறு­வ­னம் மதிக்­கி­றதா என்­பவை குறித்து கேள்வி எழுப்­பி­னர். டுவிட்­டர் இந்­தியா ஏன் இன்­னும் அந்­நாட்­டுச் சட்­டங்­க­ளுக்கு நிறு­வ­னம் உடன்­ப­டு­வதை உறுதி செய்­யும் கீழ்ப்­ப­டி­தல் துறைக்கு தலைமை நிர்­வா­கியை நிய­மிக்­க­வில்லை, பிரச்­சி­னை­களை, குறிப்­பாக சமய ரீதி­யான வெறுப்­பு­ணர்வை உண்­டாக்­கக்­கூ­டிய உள்­ள­டக்­கம் குறித்து நிறுவ­னத்­தின் கொள்­கை­கள் உள்­ளிட்ட அம்­சங்­கள் பற்­றி­யும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கேள்வி எழுப்­பி­னர்.

கட்­சி­வா­ரி­யாக இல்­லாத அந்­தக் குழு­­வின் விசா­ர­ணைக்கு காங்­ கிர­ஸ் கட்­சி­யைச் சேர்ந்த சஷி தரூர் தலைமை வகித்­தார். பார­திய ஜன­தா­வின் நிஷி­காந்த் டுபேய் போன்­ற­வர்­கள் இடம் வகித்­த­னர். டுவிட்­டர் நிறு­வ­னத்­தின் சார்­பில் இந்­தி­யா­வுக்­கான அதன் பொதுக்­கொள்கை நிர்­வாகி ஷகு­ப்தா காம்­ரான், நிறு­வ­னத்­தின் சட்ட ஆலோ­ச­கர் ஆயுஷி கபூர் இரு­வ­ரும் கலந்­து­கொண்­ட­னர்.

இந்­தி­யா­வில் சட்­டங்­கள் முக்­கி­யம் என்ற போதும் தங்­கள் நிறு­வன விதி­மு­றை­களும் முக்­கிய மானவை என்று அவர்­கள் கூறி­னர்.

தங்­கள் கேள்­வி­க­ளுக்கு டுவிட்­டர் நிர்­வா­கி­கள் மடை­மாற்று வித­மா­க­வும் மேம்­போக்­கா­க­வும் பதில் அளித்­த­தாக நாடா­ளு­மன்ற குழு­வி­னர் கடிந்­து­கொண்­ட­தாக தக­வல்­கள் தெரி­வித்­தன.

கடந்த மே மாத இறு­தி­யில் நடப்­புக்கு வந்த இந்­தி­யா­வின் புதிய தக­வல் தொழில்­நுட்ப விதி­மு­றை­களை, டுவிட்­டர் தவிர்த்த யூடி­யூப், ஃபேஸ்புக் போன்ற மற்ற முக்­கிய சமூக ஊட­கங்­கள் ஏற்­றுக்­கொண்­டுள்­ளன. ஆனால் டுவிட்­டர் அந்த விதி­மு­றை­க­ளுக்கு ஏற்ப அதன் செயல்­பா­டு­களை மாற்­ற­வில்லை.

அதன் பின்­னர் டுவிட்­டர் நிறு­வ­னத்­துக்­கும் இந்­திய அர­சாங்­கத்­துக்­கும் இடையே உர­சல் ஏற்­பட்­டது. இந்­திய துணை அதி­பர் வெங்­கையா நாயுடு, ஆர்­எஸ்­எஸ் தலை­வர்­கள் உள்­ளிட்­ட­வர்­க­ளின் கணக்­கு­க­ளுக்கு அளிக்­கப்­பட்ட நீல­நிற டிக்­கு­களை சில மணி­நே­ரத்­துக்கு நீக்­கி­யது டுவிட்­டர். கணக்­கு­கள் உண்­மை­யா­னவை என்று உறுதி செய்­யப்­பட்­டதை அந்த டிக்­கு­கள் காட்­டு­கின்­றன.

கடந்த 5ஆம் தேதி காஸி­யா­பாத்­தில் உள்ள முஸ்­லிம் நபர் தன்­னைப் போலி­சார்­ அ­டித்­த­தா­கக் குற்­றஞ்­சாட்­டிய காணொளி டுவிட்­ட­ரில் பகி­ரப்­பட்­டது. ஆனால் அது பொய்த் தகவல் என உத்­திரப் பிர­தே­சப் போலி­ஸ் விளக்­கமளித்தது.

டுவிட்­டர் நிறு­வ­னத்­தின் இப்­போக்கு குறித்து விளக்­கம் அளிக்­கு­மாறு நாடா­ளு­மன்­றக் குழு அதற்கு உத்­த­ர­விட்­டி­ருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!