மில்கா சிங்கின் உடல் நேற்று நல்லடக்கம்

மில்கா சிங்கின் உடல் நேற்று நல்லடக்கம்

2 mins read
1e4b113e-4d8a-4b24-90c2-b5ae6b4a2ffa
திரு மில்கா சிங்கின் (படம்) வாழ்க்கை வரலாறு 2013ல் 'பாக் மில்கா பாக்' எனும் தலைப்பில் திரைப்படமாக்கப்பட்டது. 'ஓடு மில்கா ஒடு' என்பது அதன் பொருள். திரு சிங்கின் தந்தை அவரிடம் கூறிய கடைசி சொற்கள் அவை. தற்போதைய பாகிஸ்தானில் உள்ள கோவிந்த்புராவில் பிறந்த அவர், 1947ம் ஆண்டுப் பிரிவினையில் குடும்பத்தை இழந்து தப்பி இந்தியாவுக்கு வந்தார். படம்: ஏஎஃப்பி -

சண்டிகர்: கொவிட்-19 தொற்று கார­ண­மாக உயி­ரி­ழந்த இந்­தி­யா­வின் மிகப்புகழ்­பெற்ற ஓட்­டப்­பந்­தய வீரர் மில்கா சிங்­கின் இறு­திச்­ சடங்கு நேற்று மாலை முழு அர சாங்க மரி­யா­தை­யு­டன் நடை­பெற்­றது. ஒரு மாதத்­துக்கு முன்­னர் தொற்­று­கண்ட திரு சிங், அதன் தொடர்­பி­லான மருத்­து­வப் பிரச்­சி­னை­க­ளால் கடந்த வெள்­ளிக்­கிழமை இந்­திய நேரப்­படி இரவு 11.30 மணிக்கு மர­ண­ம­டைந்­தார். அவ­ருக்கு வயது 91.

ஒரு மாதத்­துக்கு முன்­னர் திரு சிங்­குக்கு கிருமி தொற்­றி­யது. சண்­டி­கர் நக­ரில் உள்ள தமது இல்­லத்­தில் தனி­மை­யில் இருந்த அவர் பின்­னர் அங்­குள்ள பிஜி­மர் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார்.

அவ­ரைப் போலவே கொவிட்-19 தொற்­றால் பாதிக்­கப்­பட்ட அவ­ரது 85 வயது மனைவி நிர்­மல் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை தனி­யார் மருத்து­வ­ம­னை­யில் மர­ண­முற்­றார்.

மருத்­து­வக் குழு பெரி­தும் முயற்சி செய்­தும் கடு­மை­யா­கப் பேரா­டி­யும் திரு சிங்கை காப்­பாற்ற முடி­ய­வில்லை என்று மருத்­துவ ­மனை கூறி­யது.

'பறக்­கும் சீக்­கி­யர்' என்­றும் அழைக்­கப்­பட்ட திரு மில்கா சிங், ஆசிய விளை­யாட்­டுப் போட்­டி­களில் நான்கு முறை தங்­கப் பதக்­கம் பெற்­ற­வர். 1958ல் இந்­தி­யா­வுக்கு காமன்­வெல்த் போட்­டி­களில் முதல் தங்­கத்தைப் பெற்­றுத் தந்­தார். அந்த இரண்டு போட்­டி­க­ளி­லும் தங்­கம் பெற்ற ஒரே இந்­தி­யர் அவர். அத்­து­டன் 1960ல் நடைபெற்ற ஒலிம்­பிக் போட்­டி­களில் 400 மீட்­டர் ஓட்­டப்­பந்­த­யத்­தில் திரு சிங் நான்­கா­வதாக வந்­தார்.

இந்­தி­யா­வின் பத்­ம­ஸ்ரீ விருது பெற்ற திரு சிங்­கின் மறை­வுக்கு பிர­த­மர் நரேந்­திர மோடி உட்­பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

நாடு மகத்­தான விளை­யாட்டு வீரரை இழந்­து­விட்­டதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.