ஜம்மு காஷ்மீருக்கு மாநிலத் தகுதி; பிரதமர் மோடி ஆலோசனை

ஜம்மு காஷ்மீருக்கு மாநிலத் தகுதி; பிரதமர் மோடி ஆலோசனை

2 mins read
021b9447-14f0-4af0-aa90-07168f691be2
-

புது­டெல்லி: ஜம்மு-காஷ்­மீ­ருக்கு மீண்­டும் மாநி­லத் தகுதி வழங்­கு­வது, அங்கு சட்­ட­சபை தேர்­தலை நடத்­து­வது ஆகி­யவை குறித்து அர­சி­யல் கட்­சித் தலை­வர்­க­ளு­டன் பிர­த­மர் நரேந்­திர மோடி இம்­மா­தம் 24ஆம் தேதி பேச்சு நடத்­த­வுள்­ள­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.

ஜம்மு-காஷ்­மீ­ருக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த சிறப்­புத் தகுதி 2019 ஆகஸ்ட்­டில் ரத்து செய்­யப்­பட்­டது. மேலும், ஜம்மு-காஷ்­மீர், லடாக் என இரண்டு யூனி­யன் பிர­தே­சங்­க­ளாக அது பிரிக்­கப்­பட்­டது.

இதில் ஜம்மு-காஷ்­மீர் யூனி­யன் பிர­தே­சம், சட்ட சபை­யைக் கொண்­ட­தாக இருக்­கும் என அறி­விக்­கப்­பட்­டது.

தற்­போது ஜம்மு-காஷ்­மீ­ரில் இயல்பு நிலை திரும்பி வரு­வ­தால் மீண்­டும் மாநி­லத் தகுதி அளிப்­பது குறித்­தும் சட்­ட­சபை தேர்­தலை நடத்­து­வது குறித்­தும் மத்­திய அரசு ஆலோ­சித்து வரு­வ­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இதை­யொட்டி பிர­த­மர் நரேந்­திர மோடி தலை­மை­யில் இம்­மா­தம் 24ஆம் தேதி டெல்­லி­யில் அனைத்­துக் கட்சிக் கூட்­டம் நடக்க உள்­ளது. இதில் பங்­கேற்க ஜம்மு-காஷ்­மீ­ரைச் சேர்ந்த அர­சி­யல் கட்­சி­ களுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கத் தெரி­கிறது.

ஜம்மு-காஷ்­மீ­ரில் தொகுதி மறு சீர­மைப்பு செய்­யப்­பட வேண்­டும். இது தொடர்­பா­க­வும் அனைத்­துக் கட்சிக் கூட்­டத்­தில் விவா­திக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இந்­தப் பணி முடிந்­த­தும் இவ்­வாண்டு இறு­தி­யில் அல்­லது அடுத்­தாண்டு துவக்­கத்­தில் சட்ட சபை தேர்­தலை நடத்த திட்டமிடப்­பட்­டுள்­ள­தாக தெரி­கிறது.

ஜம்மு-காஷ்­மீ­ருக்கு மீண்­டும் மாநி­லத் தகுதி அளிப்­பது தொடர்­பா­க­வும் விவா­திக்­கப்­ப­ட­வுள்­ளது. இந்த நிலை­யில் தேசிய மாநாட்­டுக் கட்சி, மக்­கள் ஜன­நா­ய­கக் கட்சி உள்­ளிட்ட ஒன்­பது கட்­சி­கள் ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் பங்­கேற்­கும் என்று கூறப்­ப­டு­கிறது.

இதற்­கி­டையே பார­திய ஜனதா மூத்த தலை­வர்­களில் ஒரு­வ­ரான மத்­திய உள்­துறை அமைச்­சர் அமித் ஷா, ஜம்மு - காஷ்­மீ­ரின் பாது­காப்பு நில­வ­ரம் குறித்து சில நாட்­க­ளுக்கு முன்பு ஆய்வு செய்­தார்.

தேசிய பாது­காப்பு ஆலோ­ச­கர் அஜித் தோவல், ஜம்மு-காஷ்­மீர் துணை­நிலை ஆளு­நர் மனோஜ் சின்ஹா, உள்­துறை மற்­றும் பாது­காப்புத் துறை அதி­கா­ரி­கள் இதில் பங்­கேற்­ற­னர்.

இந்த நிலையில் மக்­கள் ஜன­நா­ய­கக் கட்­சித் தலை­வர் மெஹ­பூபா முப்­தி­யின் உற­வி­ன­ரும் அந்த கட்­சி­யின் மூத்த தலை­வ­ரு­மான சர்­தாஜ் மதானி வீட்­டுச் சிறை­யில் இருந்து நேற்று முன்­தி­னம் விடு­விக்­கப்­பட்டுள்ளார். இவ­ரும் ஆேலா ச­னைக் கூட்­டத்­தில் பங்­கேற்­பார் எனத் தெரி­கிறது.