'எவ்வளவு நாள் அடைந்து கிடப்பது'

'எவ்வளவு நாள் அடைந்து கிடப்பது'

2 mins read
577a7d78-0dee-4f2e-ad1c-3a4bcdde77df
கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் புதுடெல்லியில் உள்ள சரோஜினி நகர் சந்தையில் நேற்று கூட்டம் அலைமோதியது. படம்: ஏஎஃப்பி -
Google News Preferred Icon

புது­டெல்லி: சில வாரங்­க­ளுக்கு முன்பு தொற்­றுக்­குப் பலி­யா­ன­வர்­களை 24 மணி நேர­மும் அடக்­கம் செய்­துக் கொண்டிருந்த தலை­ந­கர் புது­டெல்­லி­யில் நிலைமை தற்­போது மாறி­யுள்­ளது.

இவ்­­வார இறு­தி­யில் ஏரா­ள­மான மக்­கள் கடைத் தொகு­தி­க­ளி­லும் சந்­தை­க­ளி­லும் குவிந்து தங்­க­ளு­டைய ஆதங்­கத்­தைத் தீர்த்­துக் கொண்­ட­னர்.

ஒரு கையில் ஆடை­கள் நிரம்­பிய பையை மாட்­டிக்­கொண்டு மிக­வும் பர­ப­ரப்­பான 'செலக்ட் சிட்டி வாக்' கடைத்­தொ­கு­தி­யில் கண­வ­ரு­டன் மேலும் பொருட்­களை வாங்­கிக் கொண்­டி­ருந்த திரு­மதி சுருளி குப்தா, வீட்­டி­லேயே அடைந்­து ­கிடந்து நொந்­து­போய்­விட்­டேன்," என்றார்.

"எனக்கு இந்த மாற்­றம் தேவைப்­ப­டு­கிறது. எவ்­வ­ளவு காலம்­தான் அடைந்­து­கி­டப்­பது," என்று 26 வயது விற்­பனை அதி­கா­ரி­யான கூறினார்.

அந்த கடைத்­தொ­கு­தி­யில் இருந்த உணவு நிலை­யத்­தி­லும் கூட்­டம் நிரம்பி வழிந்­த­தால் அதை­யும் பொருட்­ப­டுத்­தா­மல் சுருளி குப்தா பொறு­மை­யு­டன் வரி­சை­யில் காத்­தி­ருந்­தார்.

"கொரோனா கிரு­மித்­தொற்று இப்­போது போகாது. அத­னு­டன் வாழப்­ப­ழ­கிக் கொள்­வ­தைத் தவிர வேறு வழி­யில்லை," என்­றார் அவர்.

அவ­ருக்­குப் பின்­னால் பலர் கூட்­ட­மாக பேசிக்கொண்டு அள­வ­ளா­வி­னர். சமூக இடை­வெளி, முகக் கவ­சம் பற்றி அறி­விப்­பு­கள் வந்­து­கொண்­டே­யி­ருந்­தா­லும் அவர்­கள் தோசை­யை­யும் நூடல்­சை­யும் ருசிப்­ப­தில் மும்­மு­ர­மாக இருந்­த­னர்.

பிர­பல பர்­கர் கடை வாச­லில் வரி­சை­யில் இருந்த ஒரு தம்­ப­தி­ய­ரின் முகத்­தில் முகக்­க­வ­சம் தொங்கிக் கொண்­டி­ருந்­தது. உடல் வெப்­ப­நிலை பரி­சோ­திப்­ப­தை­யும் கையைக் கிருமி நாசி­னி­யைக் கொண்டு கைகளை சுத்­தப்­ப­டுத்­து­வ­தை­யும் ஊழியர்கள் அடிக்­கடி நினைவுப்­ப­டுத்­தினர்.

இந்­தக் கடைத்­தொ­கு­திக்கு சற்றுத் தொலை­வில் உள்ள லஜ்­பட் நகர் சந்­தை­யி­லும் திறந்­த­வெளி சாைலயோ­ரக் கடை­களிலும் கூட்­டம் அலை­மோ­தி­யது. தலை­யங்கி, வளை­யல்­கள், மலி­வான முக அழகு சாத­னங்­களை பலர் பேரம் பேசி வாங்கி பெரு­மை­யு­டன் நடந்­த­னர்.

தள்­ளு­வண்­டி­யில் விற்­கப்­பட்ட 'கூல்சே-சோலே' உண­வை­யும் (ரொட்டி-மசாலா சுண்­டல்) வாங்கி வாயில் லாவ­க­மா­கத் தள்ளி ருசித்­த­னர்.

ஆனால் இன்று கடைக்கு வந்­தி­ருக்­கக் கூடாது என்று கல்­லூரி மாண­வி­யான 21 வயது பிரெர்னா ஜெயின் தெரி­வித்­தார்.

"ஒரே கூட்­டம், ஒன்­று­விட்ட சகோ­த­ர­ரின் திரு­ம­ணத்­துக்­காக சில பொருட்­களை அவ­ச­ர­மாக வாங்க வேண்­டி­யி­ருந்­தது. அத­னால்­தான் வந்­தேன். இப்­படி வரு­வது பாது­காப்­பா­னது அல்ல. ஆனால் எல்­லாமே முக்­கி­ய­மாக இருக்­கிறது," என்று அவர் கூறி­னார்.

இரு­பது மில்­லி­யன் மக்­கள் வசிக்­கும் தலை­ந­க­ரில் கடந்த மாதம் பயங்­க­ர­மான காட்­சி­கள் அரங்­கே­றின. கடந்த மாதம் கிரு­மித்­தொற்று இது­வரை இல்­லாத உச்­சத்­தைத் தொட்­டது. கொரோ­னா­வுக்­குப் பலி­யா­ன­வர்­களை இறுதி அடக்­கம் செய்­யக்­கூட இட­மில்­லா­மல் போனது. இரவு பக­லாக சட­லங்­கள் எரிக்­கப்­பட்­டன. படுக்­கை­கள், உயிர்­வாயு பற்­றாக்­கு­றை­யால் மூச்­சுத் திண­றிய நோயா­ளி­களில் பலர் மருத்­து­வ­மனை வாச­லிலே உயி­ரை­விட்­ட­னர்.

இந்­தி­யா­வில் தொற்­றுக்கு 330,000 பேருக்கு மேல் பலி­யா­கி­விட்­ட­னர்.

ஆனால் மர­ண­முற்­றோர்­க­ளின் எண்­ணிக்கை இதை­விட அதி­க­மாக இருக்­கும் என்று மருத்­துவ நிபு­ணர்­கள் கூறி­யுள்­ள­னர்.