2022ல் இந்திய விமானப் படையில் 'ரஃபேல்' விமானங்கள் சேர்ப்பு

1 mins read
efede55d-5372-4836-a02c-43279035f796
-

புது­டெல்லி: இந்­திய விமா­னப் படை­யில் வரும் 2022ம் ஆண்­டில் ரஃபேல் போர் விமா­னங்­கள் இணைக்­கப்­படும் என்று இந்­திய விமா­னப் படைத் தலை­வர் ஆர்.கே.எஸ். பதொ­ரியா தெரி­வித்­துள்­ளார்.

இந்­திய விமா­னப் படைக்கு வலு­சேர்க்­கும் வகை­யில் பிரான்ஸ் நாட்­டி­லி­ருந்து 59,000 கோடி ரூபாய் மதிப்­பில் 36 ரஃபேல் போர் விமா­னங்­களை வாங்க அந்­நாட்டு அர­சு­டன் மத்­திய பாஜக அரசு கடந்த 2016ஆம் ஆண்டு ஒப்­பந்­தம் போட்­டது.

இந்த ஒப்­பந்­தத்­தில் முறை­கேடு நடை­பெற்­றுள்­ள­தாக தொடக்­கத்­தி­லி­ருந்தே காங்­கி­ரஸ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ராகுல் காந்தி குற்­றம் சாட்டி வரு­கி­றார்.

இந்த நிலை­யில் பிரான்ஸ் நாட்­டு­ட­னான ஒப்­பந்­தப்­படி இது­வரை 8க்கும் மேற்­பட்ட ரஃபேல் போர் விமா­னங்­கள் இந்­தி­யா­வுக்கு வந்­துள்­ளன.

மேலும் ரஃபேல் போர் விமா­னங்­கள் இந்­தி­யா­வுக்கு வர­வுள்­ளன.

இதற்­கி­டையே தெலங்­கானா மாநி­லம் ஐத­ரா­பாத்­தின் விமா­னப்­படை பயிற்சிக் கழ­கத்­தில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொண்டு பேசிய இந்­திய விமானப் படைத் தலை­வர் ராகேஷ் குமார் சிங் பதொ­ரியா, ரஃபேல் போர் விமா­னங்­களை விமா­னப் படை­யில் 2022ஆம் ஆண்­டில் இணைக்க இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ள­தாக கூறி­னார்.

"கொள்­ளை­நோய் பர­வல் கார­ண­மாக ஒன்­றி­ரண்டு விமா­னங்­கள் தாம­தமாக வந்துள்ளன.

"ஆனால் மற்ற விமானங்கள் குறிப்­பிட்ட காலத்­திற்­குள் வந்­துள்­ள­தால் திட்­ட­மிட்­ட­படி ரஃபேல் போர் விமா­னங்­கள் இந்­திய விமா­னப் படை­யில் சேர்க்­கப்­படும்," என்று திரு கே. எஸ். பதொரியா தெரிவித் தார்.