மும்பை: சிவசேனா கட்சித் தலை வரும் மகாராஷ்டிரா முதல்வருமான உத்தவ் தாக்கரே, நாடே சமூக அமைதியின்மையை நோக்கிச் செல்வதாக எச்சரித்துள்ளார்.
வெறும் ஆட்சியைப் பிடிப்பதற் காக ஆட்சிக்கு வருவதா அல்லது பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக ஆட்சிக்கு வருவதா என அரசியல் கட்சிகள் முடிவு செய்ய வேண்டுமென அவர் அறி வுறுத்தியுள்ளார். சிவ சேனாவின் 55வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய உத்தவ் தாக்கரே, "அரசியலில் வெற்றி முக்கியமா அல்லது பொருளியல் பிரச்சினைகள் முக்கியமா என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் முடிவுசெய்ய வேண்டும். சமூகப்பதற்றம் என்பது கடுமையான சொல்லாக இருக்க லாம். ஆனால் நிச்சயமாக நம் நாடு சமூக அமைதியின்மையை நோக்கிப் பயணிக்கிறது. மக்கள் பிரச்சி னை யைத் தீர்க்க ஆட்சிக்கு வர வேண்டுமா அல்லது அதிகாரத்துக் காக மட்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. பொருளியல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல் சந்தேக அரசியலில் ஈடுபட்டால் நாம் மிகப்பெரிய பிரச்சி னையில் சிக்கிக்கொள்வோம்," என்று கூறினார்.

