மருத்துவரைத் தாக்கினால் உடனடி வழக்குப் பதிவு

மருத்துவரைத் தாக்கினால் உடனடி வழக்குப் பதிவு

1 mins read
6707f98d-43b3-4dc9-be73-e1f6f428e381
-

புது­டெல்லி: மருத்­து­வர், சுகா­தா­ரப் பணி­யா­ளர்­களைத் தாக்­கு­வோர் மீது உட­னடி வழக்­குப் பதிவு செய்ய மாநில மற்­றும் யூனி­யன் பிர­தே­சங்­க­ளுக்கு மத்­திய அரசு அறி­வு­றுத்தி உள்­ளது.

கிரு­மித்­தொற்று சிகிச்சை தொடர்­பாக நாட்­டின் பல்­வேறு பகுதி­க­ளி­லும் மருத்­து­வர், சுகா­தாரப் பணி­யா­ளர்­கள் தாக்­கப்­ப­டு­வ­தாக புகார் எழுந்­தது.

இதன் கார­ண­மாக மாநி­லங்­கள் மற்­றும் யூனி­யன் பிர­தே­சங்­க­ளுக்கு மத்­திய உள்­துறை செய­லர் அஜய் பல்லா நேற்று முன்­தி­னம் கடி­தம் ஒன்றை அனுப்­பி­வைத்­தார்.

"டாக்­டர் உட்­பட சுகா­தா­ரப் பணி­யா­ளர்­க­ளுக்கு எதி­ரான அச்­சு­றுத்­தல், தாக்­கு­தல் போன்­றவை, அவர்­க­ளது மன உறு­தி­யைக் குறைத்து, பாது­காப்­பின்மை உணர்வை உரு­வாக்­கக்­கூ­டும். எனவே தாக்­கு ­தலில் ஈடு­ப­டு­வோர் மீது 2020ஆம் ஆண்டு திருத்­தப்­பட்ட தொற்­று­நோய் சட்­டத்­தின் கீழ் வழக்­குப் பதிவு செய்து உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்," என்று கடி­தத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மருத்­து­வர் உட்­பட சுகா­தா­ரப் பணி­யா­ளர்­க­ளைத் தாக்­கி­னால் ஐந்து அல்­லது ஏழு ஆண்­டு­கள் சிறை இரண்டு அல்­லது 5 லட்­சம் ரூபாய் வரை அப­ரா­தம் விதிக்கப் படலாம்.