செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
f2d63362-21d2-4688-973d-3c0ef2e1edd3
-

யோகா நாள்; ேமாடி சிறப்புரை

புதுடெல்லி: 7வது அனைத்துலக யோகா நாள் இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படவுள்ளது. இவ்வாண்டு நாளின் கருப்பொருள் 'ஆரோக்கியத்திற்கு யோகா' என்பதாகும். டெல்லியில் இன்று காலை 6.30 மணிக்குத் தொடங்கும் யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்ற உள்ளார். பின்னர் யோகா செயல்முறை விளக்கம் நடைபெறும். ஸ்ரீஸ்ரீ ரவி சங்கர், சத்குரு ஜக்கி வாசுதேவ், எச்ஆர் நாகேந்திரா, கமலேஷ் படேல் உள்ளிட்ட 15 ஆன்மிகத் தலைவர்கள் மற்றும் யோகா குருக்கள், ஆரோக்கிய வாழ்விற்கான யோகா குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்கின்றனர். இந்த நிலையில் வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் அந்தந்த நாடுகளில் பல்வேறு யோகா நாள் நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. உலக அளவில் சுமார் 190 நாடுகளில் யோகா நாள் கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உ.பி.யில் பாஜக துணைத் தலைவர்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவராக பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமான முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஏ.கே.ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். உபியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில் அடுத்தாண்டு இங்கு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்த நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக துணைத் தலைவராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஏ.கே.ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2001ல் குஜராத் முதல்வராக மோடி பதவி ஏற்றதிலிருந்து அவரது செயலராக பணியாற்றியுள்ளார். 2014ல் பிரதமராக மோடி பொறுப்பேற்றதும் பிரதமர் அலுவலக இணைச்செயலர், கூடுதல் செயலர் பதவிகளை அவர் வகித்துள்ளார்.