ரவிசங்கர்: இந்தியாவுக்குப் பாடம் நடத்தாதீர்

ரவிசங்கர்: இந்தியாவுக்குப் பாடம் நடத்தாதீர்

1 mins read
86765514-9d83-4c35-b903-e73faf3451a6
-

புதுடெல்லி: ஜனநாயகம், கருத்து சுதந்திரம் குறித்து அமெரிக்க சமூக வலைத்தள நிறுவனங்கள் இந்தியாவுக்குப் பாடம் எடுக்க வேண்டாம் என மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

புனே நகரில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் இணையம் வழி பங்கேற்றுப் பேசிய அவர், இந்தியாவில் சமூக வலைத்தளங்கள் சுதந்திரமாகச் செயல்பட அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

அதேசமயம் இத்தளங்க ளைப் பயன்படுத்தும் மக்களின் நலன், நாட்டின் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டியதும் அரசின் கடமை என்றும் இதற்காகத்தான் புது விதிமுறைகளை மத்திய அரசு விதித்ததாகவும் அவர் கூறினார்.