ஒலிம்பிக் போட்டிக்கான புதிய விதிமுறைகள்: இந்தியா கடும் அதிருப்தி

ஒலிம்பிக் போட்டிக்கான புதிய விதிமுறைகள்: இந்தியா கடும் அதிருப்தி

2 mins read
eab39e95-d7ab-4e3f-83af-8ecd6dc42dca
-

புது­டெல்லி: ஒலிம்­பிக் போட்­டி­களில் பங்­கேற்­கும் குறிப்­பிட்ட சில நாடு­களுக்கு மட்­டும் கடும் விதி­மு­றை­கள் விதிக்­கப்­பட்­டுள்­ளதை ஏற்க இய­லாது என இந்­தியா தெரி­வித்­துள்­ளது.

ஜப்­பா­னின் இந்த நட­வ­டிக்­கை­யானது நியா­ய­மற்­றது என்று இந்­திய ஒலிம்­பிக் சங்­கம் தெரி­வித்­துள்­ளது.

கொரோனா தொற்­றால் அதி­கம் பாதிக்­கப்­பட்­டுள்ள சில நாடு­களில் இருந்து ஜப்­பான் வரும் ஒலிம்­பிக் வீரர்­க­ளுக்கு கூடு­தல் கட்­டுப்­பா­டு­களை ஒலிம்­பிக் ஏற்­பாட்­டா­ளர்­கள் விதித்­துள்­ள­னர். இத­னால் இந்­தியா, பாகிஸ்­தான், பிரிட்­டன் உள்­ளிட்ட 11 நாடு­க­ளின் வீரர்­க­ளுக்குப் பாதிப்பு ஏற்­படும் என சுட்­டிக் காட்­டப்­பட்­டுள்­ளது.

ஒலிம்­பிக் ஏற்­பாட்­டா­ளர்­கள் அறி­வித்­துள்ள புதிய விதி­மு­றை­க­ளின்­படி ஒலிம்­பிக் போட்­டி­யில் பங்­கேற்­கும் வீரர்­கள் தங்­கள் நாட்­டி­லி­ருந்து ஜப்­பா­னுக்­குப் புறப்­படும் ஒரு வாரத்­திற்கு முன்பே தின­மும் பரி­சோ­த­னை­கள் செய்­து­கொள்ள வேண்­டும் என்­றும் ஜப்­பான் வந்து சேர்ந்த பின்­னர் முதல் மூன்று நாட்­க­ளுக்கு மற்ற குழுக்­க­ளு­டன் தொடர்­பில் இருக்­கக்­கூ­டாது என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால், இத்­த­கைய விதி­முறை­களால் போட்­டி­யா­ளர்­கள் மூன்று நாட்­கள் பயிற்சி மேற்­கொள்ள முடி­யாது என்­றும் போட்­டிக்­குத் தயா­ரா­வ­தில் வீரர்­க­ளுக்குப் பின்­ன­டைவு ஏற்­படும் என்றும் இந்­திய ஒலிம்­பிக் சங்­கம் கூறி­யுள்­ளது.

"போட்டி தொடங்­கு­வ­தற்கு ஐந்து நாட்­க­ளுக்கு முன்­பு­தான் வீரர்­கள் அனை­வ­ரும் விளை­யாட்டு கிரா­மத்­துக்கு வந்து சேர்­வர். இந்­நிலை­யில் மூன்று நாட்­கள் அவர்­களுக்­குப் பயிற்சி இன்றி வீணா­கும்.இந்த மூன்று நாள் பயிற்­சி­தான் அவர்­களை போட்­டிக்­கான தயார் நிலை­யின் உச்­சத்­துக்­குக் கொண்டு செல்­லும்.

"ஐந்து ஆண்­டு­க­ளாக ஒலிம்­பிக் போட்­டிக்­காக மிகத் தீவி­ர­மாக உழைத்­துள்­ள­னர் இந்­திய தட­கள வீரர்­கள். இந்­நி­லை­யில் ஒலிம்­பிக் போட்டி தொடங்­கும் ஐந்து நாட்­க­ளுக்கு முன்பு இவ்­வாறு பாகு­பாடு காட்­டு­வது நியா­ய­மற்­றது," என இந்­திய ஒலிம்­பிக் சங்­கம் மேலும் கூறி­யுள்­ளது.

புதிய விதி­மு­றை­க­ளின்­படி குறிப்­பிட்ட அந்த மூன்று நாட்­களும் வீரர்­கள் எங்கு தங்­க­ளது காலை, மதிய, இரவு உண­வைப் பெற­மு­டி­யும் என்று கேள்வி எழுப்­பி­யுள்ள அச்சங்­கம், விளை­யாட்­டுக் கிரா­மத்­தில் உள்ள உண­வுக் கூடத்­தில் பல நாடு­க­ளின் வீரர்­கள் வந்து போவார்­கள் என சுட்­டிக் காட்­டி­யுள்­ளது.