நேற்று அனைத்துலக யோகா தின உரையில் திருக்குறளைக் குறிப்பிட்டார் பிரதமர் மோடி: புதிய நம்பிக்கை ஒளியைத் தருகிறது யோகா

புது­டெல்லி: 'ஆரோக்­கி­யத்­துக்கு யோகா' என்­ப­து­தான் இந்த ஆண்­டின் அனைத்­து­லக யோகா தினத்­துக்­கான கருப்­பொ­ருள் என்று பிர­த­மர் மோடி கூறி­யுள்­ளார்.

கொரோனா பொருந்­தொற்­றுக் காலத்­தில் யோகா புதிய நம்­பிக்கை ஒளியை ஏற்­ப­டுத்­து­வ­தாக அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

ஏழா­வது அனைத்­து­லக யோகா தினம் நேற்று கொண்­டா­டப்­பட்­டது. இதை­யொட்டி தொலைக்­காட்­சி­யில் உரை­யாற்­றிய பிர­த­மர் மோடி, யோகா­ச­னத்­தால் ஏற்­படும் நன்­மை­களை விவ­ரித்­தார்.

பல நூறு ஆண்­டு­கள் பழமை வாய்ந்த யோகாவை முன்­னோர்­களும் சாதுக்­களும் உடல்­ந­லத்­தின் அள­வீ­டா­கக் கரு­தி­னர் என்று குறிப்­பிட்ட அவர், திரு­வள்­ளு­வ­ரின் திருக்­கு­றள் ஒன்றை மேற்­கோள் காட்­டிப் பேசி­னார்.

'நோய்­நாடி நோய்­மு­தல் நாடி அது­த­ணிக்­கும்

வாய்­நாடி வாய்ப்­பச் செயல்'

என்று குறிப்­பிட்ட பிர­த­மர் மோடி, ஒரு நோயின் அடிப்­ப­டைக் கார­ணத்­தைக் கண்­ட­றிந்து சிகிச்சை அளிக்­க­வேண்­டும் என்று தெய்­வப் புல­வர் திரு­வள்­ளு­வர் கூறி­யுள்­ள­தாக விளக்­கி­னார்.

"கண்­ணுக்­குத் தெரி­யாத எதி­ரி­யான கொரோனா கிரு­மியை வெல்ல நாம் அனை­வ­ரும் யோகா­வைக் கடைப்­பி­டிக்க வேண்­டும். யோகா­ச­னம் நமது உள்­வ­லி­மை­யைக் கூட்­டு­கிறது.

"உடல், மன நலம் ஆகிய இரண்­டை­யும்­தான் யோகா அடிப்­ப­டை­யா­கக் கொண்­டுள்­ளது. மேலும் எதிர்­மறை சக்­தியை எதிர்த்­துப் போரா­ட­வும் உத­வு­கிறது," என்று பிர­த­மர் மோடி தெரி­வித்­துள்­ளார்.

மருத்­து­வர்­களும் முன்­க­ளப் பணி­யா­ளர்­களும் யோகா­வைத் தங்­க­ளது பாது­காப்பு ஆயு­த­மா­கக் கரு­த­வேண்­டும் என்று குறிப்­பிட்ட அவர், யோகா செய்­வ­தன் மூலம் கொரோனா தொற்­றி­லி­ருந்து மீள முடி­யும் என்­றார்.

இதற்­கி­டையே கொரோ­னா­வுக்கு எதி­ரா­கப் போரா­டத் தேவைப்­படும் நோய் எதிர்ப்­புச் சக்­தியை அதி­க­ரிக்க யோகா உத­வும் என மத்­திய சுக­தார அமைச்­சர் ஹர்ஷ்­வர்­தன் தெரி­வித்­துள்­ளார்.

உலக யோகா தினத்தை முன்­னிட்டு இந்­திய அதி­பர் , மத்­திய அமைச்­சர்­கள், பாது­காப்­புப் படை வீரர்­கள் உள்­ளிட்­டோர் நேற்று யோகா பயிற்­சி­யில் ஈடு­பட்­ட­னர்.

லடாக் எல்­லைப் பகு­தி­யில், 18 ஆயி­ரம் அடி உய­ரத்­தில் பாது­காப்­புப் படை வீரர்­கள் ராணு­வச் சீருடை அணிந்து யோகா பயிற்சி செய்­த­னர். மேலும் பல்­வேறு மாநி­லங்­க­ளி­லும் யோகா சம்பந்தமான நிகழ்ச்­சி­கள் நடை­பெற்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!