தங்கக் கடத்தல் வழக்கு: 53 பேருக்கு நோட்டீஸ்

தங்கக் கடத்தல் வழக்கு: 53 பேருக்கு நோட்டீஸ்

1 mins read
0d3dfe18-2001-402c-9d70-5cd9210cd38b
-

திரு­வ­னந்­த­புரம்: கேர­ளா­வில் தங்­கக் கடத்­தில் வழக்­கில் தொடர்­பு­டைய 53 பேருக்கு சுங்க இலாகா நோட்­டீஸ் அனுப்பி உள்­ளது.

சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் மீது சுங்க சட்­டப்­படி ஏன் நட­வ­டிக்கை எடுக்­கக்­கூ­டாது என்று கேள்வி எழுப்­பப்­பட்­டுள்­ளது.

திரு­வ­னந்­த­பு­ரத்­தில் உள்ள ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சின் தூத­ர­கத்­தைப் பயன்­ப­டுத்தி கேர­ளா­வுக்கு பெரிய அள­வில் தங்­கம் கடத்தி வரப்­பட்­டுள்­ளது.

இது­கு­றித்து மத்­திய புல­னாய்வு முகமை விசா­ரணை மேற்­கொண்­ட­போது மேலும் பல அதிர்ச்­சித் தக­வல்­கள் தெரி­ய­வந்­தன.

இதை­ய­டுத்து தூத­ரக முன்­னாள் ஊழி­ய­ரான ஸ்வப்னா உள்­ளிட்ட சில அதி­கா­ரி­களும் கேரள முதல்­வ­ரின் முதன்­மைச் செய­லா­ள­ராக இருந்த சிவ­சங்­கர் மீதும் வழக்­குப் பதி­வா­னது. இவர்­கள் அனை­வ­ரும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

இந்­நி­லை­யில் சிவ­சங்­கர், ஸ்வப்னா சுரேஷ் உள்­ளிட்ட 53 பேருக்கு சுங்க இலாகா ஆணை­யர் விளக்­கம் கேட்டு நோட்­டீஸ் அனுப்பி உள்­ளார்.

அதில், அவர்­கள் மீது சுங்க சட்­டப்­படி ஏன் நட­வ­டிக்கை எடுக்­கக்­கூ­டாது என கேட்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் பதி­ல­ளிக்க சுங்க இலாகா முப்­பது நாட்­கள் கால அவ­கா­சம் அளித்துள்­ள­தா­க­வும் இந்திய ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.