தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாஜகவுக்கு எதிராக உருவாகும் புது அணி

2 mins read
7a9ca29d-423f-45c3-8d0d-1c76fa97a4ac
-

சரத்பவார், யஷ்வந்த் சின்ஹா, பிரசாந்த் கிஷோர் தீவிர முயற்சி

புது­டெல்லி: பாஜ­க­வுக்கு எதி­ராக நாடு முழு­வ­தி­லும் உள்ள எதிர்க்­கட்­சி­களை ஒன்று சேர்க்­கும் முயற்­சி­யைத் தொடங்கி உள்­ளார் தேசி­ய­வாத காங்­கி­ரஸ் கட்­சித் தலை­வர் சரத்­ப­வார்.

முன்­னாள் மத்­திய அமைச்­ச­ரும் பாஜ­க­வி­லி­ருந்து வில­கி­ய­வ­ரு­மான யஷ்­வந்த் சின்­ஹா­வும் சரத்­ப­வா­ரு­டன் இம்­மு­யற்­சி­யில் கைகோர்த்­துள்­ளார்.

கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று தேர்­தல் வியூக நிபு­ணர் பிர­சாந்த் கிஷோ­ரும் சரத்­ப­வா­ரும் மும்­பை­யில் சந்­தித்­துப் பேசி­னர். இதை­ய­டுத்து பாஜ­க­வுக்கு எதி­ராக எதிர்க்­கட்­சி­களை இணைத்து ஓர் அணியை உரு­வாக்­கும் முயற்சி தொடங்கி உள்­ள­தா­கப் பேசப்­பட்­டது.

இந்­நி­லை­யில் எதிர்க்­கட்­சி­கள் பங்­கேற்­கும் ஆலோ­ச­னைக் கூட்­டத்­துக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருக்­கிறது. ஆனால், முக்­கிய எதிர்க்­கட்­சி­யான காங்­கி­ர­சுக்கு மட்­டும் அழைப்பு விடுக்­கப்­ப­ட­வில்லை.

மாறாக, அக்­கட்­சி­யில் பல்­வேறு மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த வேண்­டு­மென கட்­சித் தலை­மைக்கு எதி­ராக குரல் கொடுத்து வரும் கபில்­சி­பல், மணிஷ் திவாரி, விவேக் தங்கா ஆகிய மூவ­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டது.

இது அர­சி­யல் பார்­வை­யா­ளர்­களை ஆச்­ச­ரி­யப்­பட வைத்த நிலை­யில், எதிர்க்­கட்­சி­கள் கூட்­டத்­தில் பங்­கேற்க இய­லாது என அம்­மூன்று மூத்த காங்­கி­ரஸ் தலை­வர்­களும் தெரி­வித்­துள்­ள­னர்.

அண்­மை­யில் நடந்து முடிந்த 5 மாநில சட்­டப்­பே­ர­வைத் தேர்­தல்­க­ளின்­போது திமுக, திரி­ணா­முல் காங்­கி­ரஸ் ஆகிய இரு கட்­சி­க­ளின் தேர்­தல் வியூக ஆலோ­ச­க­ராக செயல்­பட்­டார் பிர­சாந்த் கிஷோர். இவ்­விரு கட்­சி­களும் தேர்­த­லில் வெற்றி பெற்­றதை அடுத்து அவர் மீண்­டும் பாஜ­க­வுக்கு எதி­ராக எதிர்க்­கட்­சி­களை ஒன்­றி­ணைக்­கும் நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டுள்­ள­தா­கத் தெரி­கிறது. இந்த நட­வ­டிக்­கை­யில் யஷ்­வந்த் சின்ஹா தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ளார் என­வும் தெரி­ய­வந்­துள்­ளது.

எதிர்க்­கட்சி கூட்­டணி சார்­பில் மேற்கு வங்க முதல்­வர் மம்தா பானர்ஜி அடுத்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் பிர­த­மர் வேட்­பா­ள­ராக முன்­னி­றுத்­தப்­பட இருப்­ப­தா­க­வும் ஒரு தக­வல் வெளி­யா­னது. இதை காங்­கி­ரஸ் தலைமை ஏற்­குமா எனும் சந்­தே­கம் எழுந்­துள்­ளது.

இத்­த­கைய சில கார­ணங்­க­ளால்­தான் தற்­போது சரத்­ப­வார் உள்­ளிட்­டோர் காங்­கி­ரஸ் கட்­சித் தலை­மை­யு­டன் இந்த ஏற்­பாடு குறித்து ஏதும் பேச­வில்லை எனக் கூறப்­ப­டு­கிறது.