புதுவை அமைச்சரவை இன்று பதவியேற்க வாய்ப்பு

புதுவை அமைச்சரவை இன்று பதவியேற்க வாய்ப்பு

1 mins read
246b9e24-0037-4f81-a1ab-9510ba148403
-

புதுவை: கடந்த பல நாட்­க­ளாக புது­வை­யில் நீடித்­து­வந்த அர­சி­யல் குழப்­ப­மும் நெருக்­க­டி­யும் முடி­வுக்கு வந்­துள்­ளன. இதை­ய­டுத்து அங்கு புதிய அமைச்­ச­ரவை பதவி ஏற்க உள்­ளது.

அண்­மை­யில் நடந்து முடிந்த புது­வைச் சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் முதல்­வர் ரங்­க­சாமி தலை­மை­யி­லான என்­ஆர் காங்­கி­ரஸ், பாஜக கூட்­டணி 16 இடங்­களில் வெற்றி கண்­டது.

ஆட்­சி­யைக் கைப்­பற்­றி­ய­தும் ரங்­க­சாமி முதல்­வ­ரா­கப் பதவி ஏற்ற நிலை­யில், பாஜ­க­வைச் சேர்ந்த இரு­வ­ருக்கு அமைச்­சர் பத­வி­யும் ஒரு­வ­ருக்கு சபா­நா­ய­கர் பத­வி­யும் அளிக்­கப்­பட வேண்­டு­மென அக்­கட்­சித் தலைமை வலி­யு­றுத்­தி­ய­தா­கத் தக­வல் வெளி­யா­னது. எனி­னும் இக்­கோ­ரிக்­கையை முதல்­வர் ரங்­க­சாமி ஏற்­கா­த­தால் புதிய அமைச்­ச­ரவை பதவி ஏற்­ப­தில் தாம­தம் நீடித்து வந்­தது.

இந்­நி­லை­யில் நேற்று முன்­தி­னம் இரவு இரு­த­ரப்­புக்­கும் இடை­யே­யான பேச்­சு­வார்த்­தை­யின் முடி­வில் இணக்­கம் ஏற்­பட்­ட­தா­கத் தெரி­கிறது. இதை­ய­டுத்து புதுவை ஆளு­நர் தமி­ழி­சையை முதல்­வர் ரங்­க­சாமி சந்­தித்து அமைச்­சர்­கள் பட்­டி­யலை அளித்­துள்­ள­தா­க­வும் அதற்கு உள்­து­றை­யின் ஒப்­புதலைப் பெற ஆளு­நர் மாளிகை நட­வ­டிக்கை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்­கின்­றன.

இன்று பத­வி­யேற்பு நிகழ்வு நடை­பெ­றா­விட்­டால் வரும் 27ஆம் தேதி நடை­பெ­றக்­கூ­டும் என 'மாலை மலர்' ஊடகச் செய்தி தெரி­விக்­கிறது.