குழந்தையைச் சுமந்தபடி தடுப்பூசி பணியில் மும்முரம்

குழந்தையைச் சுமந்தபடி தடுப்பூசி பணியில் மும்முரம்

1 mins read
4367e0cf-942d-4080-8c93-26581ecc09e8
குழந்தையைச் சுமந்தபடி செல்லும் மந்திரகுமாரி. பேறுகால விடுப்பு முடிந்து மூன்று மாதங்களுக்கு முன் பணிக்கு திரும்பிய பின் இப்படித்தான் குழந்தையைச் சுமந்து வருவதாகச் சொல்கிறார். படம்: ஊடகம் -

ராஞ்சி: நாடு முழு­வ­தும் கொரோனா தடுப்­பூசி போடும் நட­வ­டிக்கை நடை­பெற்று வரு­கிறது. கிரா­மப்­பு­றங்­க­ளி­லும் தடுப்­பூசி குறித்த விழிப்­பு­ணர்­வுவை ஏற்­ப­டுத்த பல்­வேறு நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன.

இந்­நி­லை­யில் ஜார்­கண்ட் மாநி­லம் வதே­கார் பகு­தி­யைச் சேர்ந்த மந்­தி­ர­கு­மாரி என்ற சுகா­தார ஊழி­யர் அங்­குள்ள 8 கிரா­மங்­களில் தடுப்­பூசி செலுத்­தும் பணியை மேற்­கொண்­டுள்­ளார்.

அடர்ந்த வனப்­ப­கு­தி­யில் அமைந்­துள்ள அந்த கிரா­மங்­க­ளைச் சென்­ற­டைய ஆற்­றைக் கடந்து, சுமார் 35 கிலோ­மீட்­டர் நடக்க வேண்­டும்.

இந்­நி­லை­யில் தனது பச்­சி­ளம் குழந்­தையை முது­கில் சுமந்­து­கொண்டு தின­மும் தடுப்பூசிப் பெட்­டி­யைக் கையில் சுமந்­த­படி அக்­கி­ரா­மங்­க­ளுக்கு பணி­நி­மித்­தம் சென்று திரும்­பு­கி­றார் மந்­தி­ர­குமாரி. மழைக்­கா­லத்­தில் ஆற்­றைக் கடந்து செல்­ல­மு­டி­யாது என்­ப­தால் தனது பணியை அதற்கு முன்பே முடித்­து­விட வேண்­டும் எனத் திட்­ட­மிட்­டுள்­ள­தா­கச் சொல்­கி­றார்.

"குழந்­தையை முது­கில் சுமந்து செல்­வது எனக்­குப் புதி­தல்ல. பிர­சவ கால விடு­முறை முடிந்த பின்­னர் மூன்று மாதங்­க­ளுக்கு முன்­பு­தான் பணி­யில் சேர்ந்­தேன். அப்­போது முதல் குழந்­தையை முது­கில் சுமந்­த­ப­டி­தான் பணி­யாற்­று­கி­றேன்," என்று சொல்­லும் மந்­தி­ர­கு­மாரி, ஆற்­றுத் தண்­ணீர் கழுத்­த­ளவு இருக்­கும்­போ­தும்கூட அதைப் பொருட்படுத்தாமல் தைரி­ய­மாக கடந்து சென்­ற­தாகக் கூறு­கி­றார்.

அவர் சென்று வரும் கிரா­மங்­கள் அனைத்­தும் நக்­ச­லைட்­டு­க­ளின் ஆதிக்­கம் அதி­கம் உள்ள இடங்­க­ளா­கும். எனினும் மந்திரகுமாரி பயப்படவில்லை.

இந்த விவரம் தெரியுமென்றாலும் கிராம மக்களுக்குத் தடுப்பூசி போடுவது மிக முக்கியம் என்கிறார் மந்திரகுமாரி.

அவரது இந்த துணிச்சலையும் கிராம மக்கள் மீதான அக்கறையையும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி உள்ளனர்.