காஷ்மீர் தலைவர்களுடன் பிரதமர் மோடி தீவிர கலந்தாலோசனை

காஷ்மீர் தலைவர்களுடன் பிரதமர் மோடி தீவிர கலந்தாலோசனை

2 mins read
a634071a-e714-492b-a896-f61bc623c5fc
கூட்டம் தொடங்குவதற்கு முன் நலம் விசாரித்துக் கொண்ட தலைவர்கள். படம்: ஊடகம் -

புதுடெல்லி கூட்டத்தில் காஷ்மீரின் எட்டு மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

காஷ்மீரில் தேர்தல் நடத்துவது, காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து விலக்கிக் கொள்ளப்பட்டது ஆகியவை குறித்து நேற்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதையடுத்து அங்கு தேர்தல் நடத்த விரும்புகிறது மத்திய அரசு. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எட்டு மாநில கட்சிகளைச் சேர்ந்த 14 தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து தரவேண்டும் என்ற கோரிக்கையை காஷ்மீர் தலைவர்கள் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினர். மேலும் தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கினர்.

காஷ்­மீர் பிரச்­சினை தொடர்­பாக பாகிஸ்­தா­னி­டம் அமை­திப் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட வேண்­டும் என மக்­கள் ஜன­நா­யக கட்­சித் தலை­வ­ரான மெஹ்­பூபா முஃப்தி தொடர்ந்து வலி­யு­றுத்தி வரு­கி­றார். நேற்­றைய ஆலோ­ச­னைக் கூட்­டத்­தி­லும் அவர் அதை வலி­யு­றுத்­தி­னார்.

இதற்­கி­டையே தலி­பான் இயக்­கத்­து­டன் இந்­திய அரசு மறை­முக பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்­கான தொடர்­பு­களை ஏற்­ப­டுத்தி வரு­வ­தாக ஒரு தக­வல் வெளி­யாகி உள்­ளது.

ஆப்­கா­னிஸ்­தா­னி­லி­ருந்து அமெ­ரிக்கா, தனது படை­களை முழு­வ­து­மா­கத் திரும்­பப் பெறும் என அறி­வித்­துள்­ளது. அந்த நட­வ­டிக்கை விரை­வில் முடி­வுக்கு வரு­கிறது.

இந்­நி­லை­யில் ஆப்­கா­னிஸ்­தா­னில் இது­வரை ஏற்­ப­டுத்தி உள்ள தாக்­கத்­தை­யும் தனது கட்­டுப்­பாட்­டில் உள்ள அம்­சங்­க­ளை­யும் இழக்க இந்­திய அரசு விரும்­ப­வில்லை என்­றும் அதன் கார­ண­மா­கவே தலி­பான் இயக்­கத்­து­டன் பேச்­சு­வார்த்­தைக்­கான தொடர்­பு­களை ஏற்­ப­டுத்த இந்­தியா விரும்­பு­கிறது என்­றும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

மேலும் ஆப்­கா­னிஸ்­தா­னில் ஏற்­படும் மாற்­றங்­கள் காஷ்­மீ­ரில் எந்­த­வித தாக்­கத்­தை­யும் ஏற்­ப­டுத்த அனு­ம­தித்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தில் இந்­திய அரசு கவ­ன­மாக இருக்­கிறது என்­றும் கூறப்­ப­டு­கிறது.

நேற்றைய கூட்டத்தில் என்னென்ன அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் முன்கூட்டியே விவரம் ஏதும் தெரிவிக்கபடவில்லை.

இரண்டு யூனி­யன் பிர­தே­சங்­க­ளா­கப் பிரிக்­கப்­பட்ட பிறகு தேர்­தலை நடத்த மத்­திய அரசு விரும்­பு­வ­தால் காஷ்­மீ­ரின் அனைத்­துக் கட்­சித் தலை­வர்­க­ளி­ட­மும் அது­கு­றித்து பேச்­சு­வார்த்தை நடத்தி உள்­ள­தா­கக் கரு­தப்­ப­டு­கிறது. மேலும், தொகுதி வரை­யறை குறித்­தும் கூட்­டத்­தில் விவா­திக்­கப்­பட்­ட­தா­கத் தெரி­கிறது.

இந்­நி­லை­யில், ஏழு கட்­சி­களை உள்­ள­டக்­கிய குப்­கர் கூட்­ட­ணி­யைச் சேர்ந்த முன்­னாள் முதல்­வர்­கள் ஃபரூக் அப்­துல்­லா­வும் மெஹ்­பூபா முஃப்தி­யும் காஷ்­மீ­ருக்கு மீண்­டும் சிறப்பு அந்­தஸ்து வழங்க வேண்­டும் என பிர­த­ம­ரி­டம் வலி­யு­றுத்­தி­ய­தாக கூறப்­படும் நிலை­யில், காங்­கி­ர­சும் இதே கோரிக்­கையை முன்­வைத்­துள்­ளது.