மனித உரிமை: பாகிஸ்தான் மீது இந்தியா குற்றச்சாட்டு

1 mins read
5b5e13ff-9092-4104-871a-b2c49e360bed
-

புது­டெல்லி: தீவி­ர­வா­தி­க­ளுக்கு ஓய்­வூ­தி­யம் வழங்­கு­வ­தாக பாகிஸ்­தான் அரசு மீது இந்­தியா குற்­றம் சாட்டி உள்­ளது.

ஐநா மனித உரிமை ஆணை­யத்­தில் நடை­பெற்ற கூட்­டத்­தில் பேசிய இந்­தி­யப் பிர­தி­நிதி பவன் குமார், ஐநா­வால் தீவி­ர­வா­தி­யாக அறி­விக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு பாகிஸ்­தான் அடைக்­க­லம் அளித்து உப­ச­ரித்து வரு­வ­தா­கக் குற்­றம் சாட்­டி­னார்.

"எனவே தீவி­ர­வா­தத்­தால் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­பு­க­ளுக்கு பாகிஸ்­தான்­தான் பொறுப்பு ஏற்க­ வேண்­டும். தீவி­ர­வா­தத்­தால் ஏற்­படும் துன்­பங்­க­ளும்­கூட மனித உரிமை மீறல்­கள்­தான்.

"மேலும் பாகிஸ்­தா­னில் உள்ள சிறு­பான்­மை­யி­னச் சிறு­மி­கள் ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­டோர் ஒவ்­வோர் ஆண்­டும் கட்­டாய மத­மாற்­றம் செய்­யப்­ப­டு­கின்­ற­னர்," என்­றும் பவன் குமார் தெரி­வித்­தார்.

மனித உரிமை ஆணை­யத்­தின் கவ­னத்­தைத் திசை திருப்­பவே பாகிஸ்­தான் அரசு அவ்­வப்­போது காஷ்­மீர் விவ­கா­ரத்தை எழுப்­பு­வ­தாக அவர் மேலும் சாடி­னார்.