புதுடெல்லி: தீவிரவாதிகளுக்கு ஓய்வூதியம் வழங்குவதாக பாகிஸ்தான் அரசு மீது இந்தியா குற்றம் சாட்டி உள்ளது.
ஐநா மனித உரிமை ஆணையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய இந்தியப் பிரதிநிதி பவன் குமார், ஐநாவால் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்து உபசரித்து வருவதாகக் குற்றம் சாட்டினார்.
"எனவே தீவிரவாதத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு பாகிஸ்தான்தான் பொறுப்பு ஏற்க வேண்டும். தீவிரவாதத்தால் ஏற்படும் துன்பங்களும்கூட மனித உரிமை மீறல்கள்தான்.
"மேலும் பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினச் சிறுமிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒவ்வோர் ஆண்டும் கட்டாய மதமாற்றம் செய்யப்படுகின்றனர்," என்றும் பவன் குமார் தெரிவித்தார்.
மனித உரிமை ஆணையத்தின் கவனத்தைத் திசை திருப்பவே பாகிஸ்தான் அரசு அவ்வப்போது காஷ்மீர் விவகாரத்தை எழுப்புவதாக அவர் மேலும் சாடினார்.

