செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
07c06d7d-0331-4be3-8f52-38770711433c
-

போலி சமூக ஊட­கக் கணக்­கு­களை முடக்­கு­வ­தற்கு மத்­திய அரசு கெடு

புது­டெல்லி: 'சமூக வலை­த்த­ளங்­கள், சமூக ஊட­கங்­கள் போன்­ற­வற்­றில் போலிக் கணக்­கு­கள் மூலம் தவ­றான செய்­தி­க­ளைப் பரப்­பும் போக்கு அதி­க­ரித்­துள்­ளது. அத­னை­ய­டுத்து 24 மணி நேரத்துக்குள் இந்­தி­யா­வில் இயங்­கும் போலிச் சமூக ஊட­கக் கணக்­கு­கள் முடக்­கப்­பட வேண்­டும் என இந்­திய அரசு அதன் புதிய தக­வல் தொழில்­நுட்ப விதி­மு­றை­களில் கூறி­யுள்­ளது. அதன்­படி 'ஃபேஸ்­புக், டுவிட்­டர், யூடி­யூப் உள்­ளிட்ட சமூக வலைத்­த­ளங்­க­ளைப் பயன்­ப­டுத்­தும் பய­னா­ளர்­க­ளின் பெயர்­களில் துவங்­கப்­படும் போலிக் கணக்­கு­கள் குறித்து சம்­பந்­தப்­பட்­ட­வர்­கள் புகார் அளித்­தால், 24 மணி நேரத்­திற்­குள் அந்த போலிக் கணக்­கு­கள் முடக்­கப்­பட வேண்­டும்' என அந்த உத்­த­ர­வில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தாக தக­வல் வெளி­யாகி உள்­ளது.

சமூக வலை­த்த­ளங்­களில் நடி­கர்­கள், அர­சி­யல் தலை­வர்­கள், விளை­யாட்டு வீரர்­கள், தொழி­ல­தி­பர்­கள் போன்ற பிரபலங்­க­ளின் கணக்­கு­களில் இருந்து புகைப்­ப­டங்­களை எடுத்து, அவர்­க­ளின் பெய­ரில் போலி­யான கணக்­கு­க­ளைத் துவங்­கும் போக்கு பர­வ­லாக காணப்­ப­டு­கிறது.

ஆயிஷா சுல்­தா­னா­வுக்கு முன் பிணை

வழங்­கி­யது கேரள உயர்­நீ­தி­மன்­றம்

கவ­ராத்தி: லட்­சத்­தீ­வைச் சேர்ந்த நடி­கை­யும் தயா­ரிப்­பா­ள­ரு­மான ஆயிஷா சுல்­தானா, தொலைக்­காட்சி உரை­யா­டல் நிகழ்ச்சி ஒன்­றில் பேசும்­போது, லட்­சத்­தீ­வில் கொரோனா பர­வு­வ­தற்கு மத்­திய அரசு உயிரி ஆயு­தத்­தைப் பயன்­ப­டுத்­து­வ­தாகப் பேசி­னார். லட்­சத்­தீவு நிர்­வாக அதி­கா­ரிக்கு எதி­ரான இந்­தப் பேச்சு கடும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யது. பாஜக தலை­வர் ஒருவர் அளித்த புகா­ரின் அடிப்­ப­டை­யில், ஆயிஷா சுல்­தானா மீது லட்­சத்­தீ­வின் கவ­ராத்தி போலி­சார் சீர்குலைவுச் சட்டத்தின்கீழ் வழக்­குப் பதிவு செய்­த­னர். இதை­ய­டுத்து, முன்­பிணை கேட்டு கேரள உயர் நீதி­மன்­றத்­தில் ஆயிஷா சுல்­தானா விண்­ணப்­பித்­தி­ருந்­தார்.

அவ­ரது மனுவை விசா­ரித்த நீதி­மன்­றம், ஒரு வாரத்­திற்கு இடைக்­கால முன்­பிணை வழங்­கி­ய­து­டன், காவல்­து­றை­யின் விசா­ர­ணைக்கு ஒத்­து­ழைக்­கு­மாறு ஆயிஷா சுல்­தா­னா­வுக்கு உத்­த­ர­விட்­டது. அதன்­படி லட்­சத்­தீவு காவல்­துறை நடத்­திய விசா­ர­ணை­யில் பங்­கேற்று விளக்­கம் அளித்­தார் ஆயிஷா சுல்­தானா.

ஒரே பய­ணி­யாக விமா­னத்­தில் துபாய் பறந்த இந்­திய தொழி­ல­தி­பர்

புது­டெல்லி: அமிர்­த­சர­சில் இருந்து புதன்­கி­ழமை துபாய்க்­குச் சென்ற விமா­னம் ஒன்­றில் பஞ்­சாப் மாநி­லத்­தைச் சேர்ந்த தொழி­ல­தி­பர் எஸ்.பி.சிங் ஓப­ராய் பய­ணம் மேற்­கொண்­டார். அப்­போது அந்த விமா­னத்­தில் இவ­ரைத் தவிர வேறு எந்த ஒரு பய­ணி­யும் பய­ணம் செய்­ய­வில்லை. "வாழ்க்­கை­யில் சில நேரங்­களில் முக்­கி­ய­மான சூழ்­நி­லை­களில் நாம் வாழ்க்­கையை மதிக்­கத்­தக்க வாய்ப்­பு­கள் கிடைக்­கும். இந்தப் பயணமும் அப்­ப­டி­தான் மறக்­க­மு­டி­யாத பய­ண­மாக அமைந்­து­விட்­டது. முற்­றி­லும் மறக்­க­மு­டி­யாத பய­ண­மாக மாற்­றிய சிறப்பு சேவை­க­ளுக்­காக ஏர் இந்­தி­யா­வுக்கு நன்றி," என்று தனது முக­நூல் பதி­வில் தெரி­வித்­துள்­ளார். பெருந்­தொற்­றின் இரண்­டா­வது அலை அதி­க­ரிப்­பால் ஏப்­ரல் 24 முதல் இந்­தி­யா­விற்­கும் ஐக்­கிய அரபு சிற்றரசுக்கும் இடை­யில் விமா­னச் சேவை­கள் நிறுத்­தப்­பட்­டன. இருப்­பி­னும் சிறப்பு விமா­னச் சேவை­க­ளுக்கு அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.

'மாநி­லங்­க­ளி­டம் 1.50 கோடி

தடுப்­பூசி மருந்­து­கள் கையிருப்பு'

புதுடெல்லி: மாநி­லங்­க­ளின் கையி­ருப்­பில் 1.50 கோடி கொரோனா தடுப்­பூ­சி­ மருந்துகள் உள்­ள­தாக மத்­திய அரசு நேற்று (வெள்­ளிக்­கிழமை) தெரி­வித்­துள்­ளது. "மாநி­லங்­கள் மற்­றும் யூனி­யன் பிர­தே­சங்­க­ளுக்கு மத்­திய அர­சின் சார்­பில் இல­வ­ச­மாக இது­வரை 305,432,450 கொரோனா தடுப்­பூ­சி­கள் அனுப்­பப்­பட்­டுள்­ளன.

அதில், 290,404,264 கொரோனா தடுப்­பூ­சி­ மருந்துகள் இது­வரை பயன்படுத்தப்பட்டுள்ளன. கையி­ருப்­பில் 15,028,186 தடுப்­பூ­சி­கள் உள்­ளன. மேலும், சில மாநி­லங்­க­ளுக்கு 4,700,000 தடுப்­பூ­சி­ மருந்துகள் அனுப்­பப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­வித்­துள்­ள­னர். மேலும், நாள்­தோ­றும் 50 லட்­சம் பேர் வரை தடுப்­பூசி போட்­டுக் கொள்­கி­றார்­கள் என மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.