கோல்கத்தாவில் போலி தடுப்பூசி முகாமில் ஊசி போட்டுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்

2 mins read
466aab1b-8e7f-4d37-9abf-93ad53be7d42
-

கோல்­கத்தா: கோல்­கத்­தா­வில் உள்ள சிட்டி கல்­லூரி வளா­கத்­தில் கடந்த 18ஆம் தேதி தடுப்­பூசி முகாம் நடந்­துள்­ளது. அதி­லும், அங்கு ரஷ்­யா­வி­லி­ருந்து வர­வ­ழைக்­கப்­பட்ட ஸ்புட்­னிக் மருந்து செலுத்­தப்­ப­டு­வ­தாக தக­வல் பர­வி­யது.

பல­ரும் அங்கு சென்று தடுப்­பூசி போட்­டுக் கொண்­ட­னர். ஆனால், சில­ருக்கு தடுப்­பூசி போட்ட பிறகு பல்­வேறு உடல் நலக் கோளா­று­கள் ஏற்­பட்­டன. ஆனால் இதெல்­லாம் பொது­வா­ன­து­தான் என்று எண்­ணிக் கொண்­டி­ருந்­த­னர்.

ஆனால், அந்த முகாமை நடத்­திய நபரை, போலி கொரோனா தடுப்­பூசி முகாம் நடத்­தி­ய­தா­கக் கூறி காவல்­து­றை­யி­னர் கைது செய்த போது­தான், அங்கு தடுப்­பூசி போட்­டுக் கொண்­ட­வர்­கள் அதிர்ச்சி அடைந்­த­னர்.

இது குறித்து விசா­ரணை நடத்திய சுகா­தா­ரத் துறை­யி­னர், அந்த முகா­மில் தடுப்­பூசி போட்­டுக் கொண்­ட­வர்­க­ளுக்கு ஏதே­னும் உடல் நலப் பிரச்சினை ஏற்­பட்­டால், மருத்­துவ உதவி அளிப்­ப­தாக உறுதி அளித்­துள்­ள­னர்.

ஐஏ­எஸ் அதி­காரி என தம்மை அடை­யா­ளப்­ப­டுத்­திக்­கொண்டு, கோல்­கத்­தா­வில் போலி தடுப்­பூசி முகாம் நடத்­திய டெபஞ்­சன் டெப் என்­ப­வரை கோல்­கத்தா போலிஸ் கைது செய்­துள்­ளது.

இந்த ஆட­வர், திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த தலை­வர்­கள் சில­ரு­டன் தொடர்­பு­டை­ய­வர் என்று கூறப்­ப­டு­கிறது. திரி­ணா­முல் தலை­வர்­க­ளு­டன் அவர் எடுத்­துக்­கொண்ட புகைப்­படங்­கள் சமூக ஊட­கங்­களில் பரவி வரு­கின்­றன.

இது­கு­றித்து சிபிஐ விசா­ரணை மேற்­கொள்ள வேண்­டும் என்று பாஜ­க­வி­னர் கேட்­டுக்­கொண்­டுள்­ள­னர்.

அந்த முகா­மில் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட நூற்­றுக்கு மேலா­ன­வர்­களில் திரி­ணா­மூல் காங்­கி­ர­ஸின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் நடி­கை­யு­மான மிமி சக்­ர­போர்த்­தி­யும் ஒரு­வர்.

இது போலி தடுப்­பூசி முகாம் என்று அறிந்­த­தும் அவர் போலி­ஸில் புகார் கொடுத்­தார். அத­னை­ய­டுத்து அந்த ஆட­வர் கைது­செய்­யப்­பட்­டார்.

அந்த முகா­மில் இருந்து ஊசி மருந்து உள்­ளிட்ட பொருட்­களை போலி­சார் கைப்­பற்­றி­னர்.