பாஜக-வில் இருந்து வந்தவர்களுக்கு கிருமிநாசினி தெளித்து சேர்த்துக்கொண்ட திரிணாமூல்

பாஜக-வில் இருந்து வந்தவர்களுக்கு கிருமிநாசினி தெளித்து சேர்த்துக்கொண்ட திரிணாமூல்

1 mins read
7d0195de-f95f-4ae7-ab7a-0a07657d1a89
பாஜக.வில் இருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் சேர வந்திருக்கும் தொண்டர்கள் மீது கிருமிநாசினி தெளிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காரர்கள். படம்: ஊடகம் -

கோல்­கத்தா: மேற்கு வங்­கா­ளத்­தில் அண்மையில் நடந்த சட்­டமன்றத் தேர்­த­லுக்கு முன், திரி­ணா­மூல் காங்­கி­ர­சில் இருந்து விலகி பாரதிய ஜன­தா கட்சியில் இணைந்த தொண்­டர்­கள் பலர் கூட்­டம் கூட்­ட­மாக மீண்­டும் திரி­ணா­மூல் காங்­கி­ர­சுக்குத் திரும்பி வரு­கின்­ற­னர்.

அந்த வகை­யில் பிர்­பும் மாவட்­டத்தை சேர்ந்த பாஜக தொண்­டர்­கள் 150 பேர் நேற்று முன்தினம் திரி­ணா­மூல் காங்­கி­ர­சில் இணைந்­த­னர். இதற்­காக இளம்­ப­ஜார் பகு­தி­யில் மேடை ஒன்று அமைக்­கப்­பட்­டி­ருந்­தது. பாஜக.­வில் இருந்து வில­கிய தொண்­டர்­களை அதில் நிறுத்தி அவர்­கள் மீது கிரு­மி­நா­சினி (சானி­டை­சர்) தெளிக்­கப்­பட்­டது. அதன்­பின்­னர் உள்­ளூர் திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் தொண்­டர்­கள், அவர்­களுக்கு தங்­கள் கட்­சிக்­கொ­டியை வழங்கி கட்­சி­யில் இணைத்­துக்­கொண்­ட­னர்.

இது குறித்து உள்­ளூர் நிர்­வாகி ஒரு­வர் கூறும்­போது, 'பா.ஜன­தா­வில் பணி­யாற்­றி­ய­வர்­களை மீண்­டும் ஏற்­ப­தற்கு முன் அவர்­களை தூய்­மைப்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மா­கிறது," என்று தெரி­வித்­தார்.

முன்­ன­தாக ஹூக்ளி மாவட்­டத்தை சேர்ந்த 200 பேர் அண்மையில் பாரதிய ஜன­தா­ கட்சியில் இருந்து விலகி மீண்­டும் திரி­ணா­மூல் காங்­கி­ர­சில் இணைந்­தி­ருந்­த­னர். அப்­போது அவர்­கள் தங்­கள் தலையை மழித்துக்­கொண்­ட­னர்.

பார­திய ஜனதா கட்­சி­யில் சேர்ந்து தாங்­கள் பாவம் செய்து விட்­ட­தா­க­வும் அதற்­குப் பரி­கா­ர­மா­க­மாக இவ்­வாறு தலையை மழித்துக் கொண்­ட­தா­க­வும் அவர்­கள் கூறி­னர்.