புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
''காங்கிரஸ் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த கட்சிகளின் தலைவர்கள் முதலில் மாநிலத் தகுதி வழங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
பின்னர் தேர்தல்களை நடத்த விரும்புகின்றனர். மத்திய அரசின் பதில் முதலில் தேர்தல், பின்னர் மாநிலத் தகுதி என்று கூறுகிறது.
குதிரைதான் வண்டியை இழுக்க வேண்டும். ஜம்மு காஷ்மீருக்கு முதலில் மாநிலத் தகுதி வழங்க வேண்டும். அதன் பிறகு தேர்தல் நடத்த வேண்டும். மாநிலம் தான் சரியான முறையில் தேர்தலை நடத்த முடியும்.
ஆனால் மத்திய அரசோ முதலில் தேர்தல் நடத்த முயலுகிறது. வண்டியால் குதிரையை இழுக்க முடியாது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

