அரசாங்க இல்லத்தில் விதிமீறி நீச்சல் குளம் கட்டிய ஐஏஎஸ் அதிகாரி

மைசூரு: மைசூரு மாவட்ட ஆட்­சி­யர் ரோகிணி சிந்­தூரி, பாகு­பாடின்றி தவறு செய்­ப­வர்­க­ளைத் தட்­டிக்கேட்க அஞ்­சா­த­வர் என்று பாராட்­டுப்­பெற்­ற­வர்.

தவறு செய்­ப­வர்­கள் ஆளுங்­கட்­சி­யைச் சேர்ந்த அர­சி­யல்வா­தி­யாக இருந்­தா­லும் சரி எதிர்க்­கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருந்­தா­லும் சரி, அவர்­களை சும்­மா­விட மாட்­டார். எனவே, இவர் அடிக்­கடி ஏதா­வது ஒரு சர்ச்­சை­யில் சிக்­கிக்­கொள்­வார். அப்­படி இந்த முறை நீச்­சல்குள சர்ச்­சை­யில் சிக்­கி­யுள்­ளார். மைசூரு ஆட்சியரின் அதி­கா­ர­பூர்வ இல்­லத்­தில் ரோகிணி சிந்­தூரி அனு­மதி பெறா­மல் நீச்­சல் குளம், மற்­றும் உடற்­ப­யிற்­சிக் கூடம் கட்­டி­யுள்­ள­தாக புகார் எழுந்­துள்­ளது.

இதைத் தொடர்ந்து கர்­நா­டக அரசு இது குறித்த விசா­ர­ணைக்கு உத்­த­ர­விட்­டது.

மைசூரு வட்­டார ஆணை­யர் ஜி.சி.பிர­காஷ் இது குறித்த ஆய்வை மேற்­கொண்­டார்.

நீச்­சல் குளம் கட்­டு­வது தொடர்­பான ஆய்வறிக்­கை­யில், ரோகிணி சிந்­தூரி குளம் கட்­டு­வ­தற்­குத் தேவை­யான அனு­ம­தி­யைப் பெற­வில்லை என்று கூறி­யுள்­ளார்.

மேலும் அந்த அறிக்­கை­யில், சிந்­தூரி, பாரம்­ப­ரிய சொத்­தான ஜல் சன்­னி­தி­யில் குளம் கட்­டு­வ­தற்கு முன்பு பாரம்­ப­ரி­யத் துறை­யி­ட­மி­ருந்தோ அல்­லது அதி­கா­ரம் பெற்ற பாரம்­ப­ரி­யக் குழு­வி­ன­ரி­ட­மி­ருந்தோ அனு­மதி பெற­வில்லை.

இதன் மூலம் விதி­மு­றை­களை மீறி உள்­ளார் என அந்த அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

2020ஆம் ஆண்டு டிசம்­பர் 30 ஆம் தேதி கட்­டு­மா­னப் பணி தொடங்கி பிப்­ர­வரி 26ஆம் தேதி நிறை­வ­டைந்­தது என ஆய்வு அறிக்கை கண்­ட­றிந்­தது. இருப்­பி­னும், மார்ச் 2ஆம் தேதி நடை­பெற்ற நிர்­மிதி கேந்­தி­ரா­வின் பொதுக் கூட்­டத்­தில் இந்­தத் திட்­டத்­திற்கு ஒப்­பு­தல் வழங்­கப்­பட்­ட­தாக குறிப்­பி­டப்­பட்டு உள்­ளது என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!