முதல்வராக அமரீந்தர் நீடிப்பார்

புது­டெல்லி: பஞ்­சாப் மாநி­லத்­தில் முதல்­வர் அம­ரீந்­தர் சிங் தலை­மை­யில் காங்­கி­ரஸ் அரசு ஆட்சி நடந்து வரு­கிறது. அம­ரீந்­தர் சிங்­கின் தலை­மைக்கு முன்­னாள் அமைச்­சர் நவ்­ஜோத் சிங் சித்து உள்­ளிட்ட சிலர் எதிர்ப்­புத் தெரி­வித்து வரு­கின்­ற­னர்.

சீக்­கி­யர்­க­ளின் புனித நூல் அவ­ம­திப்பு வழக்­கு­களில் நட­வ­டிக்கை இல்­லா­தது, தலித் சமூ­கத்­தி­ன­ருக்கு அர­சில் போதிய பிர­தி­நி­தித்­து­வம் வழங்­கா­தது, முதல்­வரை எளி­தில் அணுக முடி­யா­தது உள்­ளிட்ட பல்­வேறு புகார்­களை அவர்­கள் எழுப்­பி­யுள்­ள­னர்.

பஞ்­சாப் சட்­ட­மன்­றத்­திற்கு அடுத்த ஆண்டு தேர்­தல் நடை­பெ­ற­வுள்­ளது. இந்­நி­லை­யில், உட்­கட்சி பூசலை தீர்க்க மல்­லி­கார்­ஜுன கார்கே, ஹரீஷ் ராவத், ஜே.பி.அகர்­வால் ஆகி­யோ­ரைக் கொண்ட மூன்று பேர் குழு அமைக்­கப்­பட்­டுள்­ளது.

இக்­கு­ழு­வி­னர், முதல்­வர் அம­ரீந்­தர், முன்­னாள் அமைச்­சர் சித்து, பல்­வேறு அமைச்­சர்­கள், நாடா­ளு­மன்­றம் மற்­றும் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் என உள்­ளிட்ட நூற்­றுக்­கும் மேற்­பட்­டோரை அழைத்து கருத்­து­ கேட்­ட­றிந்­த­னர். இந்­நி­லை­யில் டெல்­லி­யில் இக்­கு­ழு­வி­னரை முதல்­வர் அம­ரீந்­தர் சிங் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இரண்­டா­வது முறை­யாக சந்­தித்து, பேச்­சு­வார்த்தை நடத்­தி­னார். இதற்கிடையே, "பஞ்­சாப் முதல்­வர் பத­வி­யில் அம­ரீந்­தர் சிங் நீடிப்­பார். அதி­ருப்­தி­யா­ளர்­க­ளின் குறை­க­ளைப் போக்க தொடர்ந்து முயற்சி மேற்­கொள்­ளப்­படும்," என்று காங்­கி­ரஸ் கட்­சி­யின் மேலி­டம் அறி­வித்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!