மகாராஷ்டிரா: மூன்றாவது அலை அச்சம்; தளர்வுகள் ரத்து

மகாராஷ்டிரா: மூன்றாவது அலை அச்சம்; தளர்வுகள் ரத்து

2 mins read
77c90eed-815f-4a20-9b01-f4db7f48d19e
மும்பையில் வாகனங்களில் அமர்ந்தபடியே முதியோர்கள், உடல் நலம் குன்றியவர்கள், கர்ப்பிணிகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள 'டிரைவ் இன்' தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. படம்: ஏஎஃபி -

எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப்: மூன்றாவது அலையால் அதிக பாதிப்புகள் இருக்காது

மும்பை: மூன்­றா­வது அலையை எதிர்­கொள்­ளத் தயா­ராக இருப்­ப­தாக மகா­ராஷ்­டிர அரசு தெரி­வித்­துள்­ளது. இதை­ய­டுத்து அம்­மா­நி­லத்­தில் அறி­விக்­கப்­பட்­டி­ருந்த ஊர­டங்கு தளர்­வு­கள் திரும்­பப் பெறப்­பட்­டுள்­ளன.

கொரோனா தொற்­றால் அதி­கம் பாதிக்­கப்­பட்ட மாநி­லங்­களில் மகா­ராஷ்­டிரா முத­லி­டத்­தில் உள்­ளது. கொரோ­னா­வுக்கு அடுத்­த­ப­டி­யாக கறுப்­புப் பூஞ்சை நோய் பாதிப்­பும் இங்­கு­தான் அதி­கம். இப்­போது கொரோ­னா­வின் உரு­மா­றிய 'டெல்டா பிளஸ்' தொற்­றும் மகா­ராஷ்­டி­ரா­வில் பரவி வரு­கிறது.

கொரோனா இரண்­டா­வது அலையை எதிர்­கொண்டு சமா­ளித்­துள்ள நிலை­யில் அங்கு மூன்­றா­வது அலை ஏற்­ப­டக்­கூ­டும் என கூறப்­ப­டு­கிறது.

இதற்­கேற்ப கடந்த சில தினங்­க­ளாக மகா­ராஷ்­டி­ரா­வில் மீண்­டும் தொற்­றுப் பாதிப்பு அதி­க­ரித்து வரு­கிறது. கடந்த புதன்­கி­ழ­மை­யில் இருந்து அன்­றா­டம் பதி­வா­கும் தொற்று எண்­ணிக்கை 10 ஆயி­ரத்­துக்கு மேலும் கீழு­மாய் பதிவாகி வரு­கிறது. மறு­பக்­கம் உயிர் இழப்­பும் அதி­க­ரித்து வரு­வ­தால் ஊரடங்குத் தளர்­வு­களை அம்­மா­நில அரசு திரும்­பப் பெற்­றுள்­ளது.

மகா­ராஷ்­டி­ரா­வைப் பொறுத்­த­வரை அம்­மா­நி­லத்தை ஐந்து பிரிவு­க­ளா­கப் பிரித்து தளர்­வு­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன. கொரோனா தொற்­றுப் பாதிப்பு, உயிர்­வாயு உத­வி­யு­டன் கூடிய படுக்­கை­கள் நிரம்­பி­யது ஆகி­ய­வற்றை அள­வு­கோ­லாக வைத்து ஐந்து பிரி­வு­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டன.

அதன்­படி முதல் பிரி­வில் இடம்­பெற்­றுள்ள பகு­தி­களில் ஏறக்­குறைய எந்­த­வித கட்­டுப்­பா­டு­களும் இல்லை. இரண்­டா­வது பிரி­வுக்­குட்­பட்ட பகு­தி­களில் வணிக வளா­கங்­களும் திரை­ய­ரங்­குகளும் திறக்க அனு­ம­திக்­கப்­பட்­டது.

மூன்­றா­வது பிரி­வில் உள்ள நகர்ப்­ப­கு­தி­களில் வார நாட்­களில் மட்­டும் கடை­கள், உடற்­ப­யிற்­சிக் கூடங்­கள் உள்­ளிட்­டவை திறக்­கப்­ப­ட­லாம் என அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லை­யில் மீண்­டும் தொற்று அதி­க­ரித்­ததை அடுத்து மகா­ராஷ்­டி­ரா­வில் தளர்­வு­கள் குறைக்­கப்­பட்­டுள்­ளன. முத­லா­வது, இரண்­டா­வது பிரிவு தளர்­வு­களை மாநில அரசு திரும்­பப் பெற்­றுள்­ளது. மேலும் தடுப்­பூசி போடும் பணி­யைத் துரி­தப்­ப­டுத்­த­வும் வேகப்­ப­டுத்­த­வும் மாவட்ட உள்­ளாட்சி நிர்­வா­கங்­க­ளுக்கு அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே மூன்­றா­வது அலை உரு­வா­கும் பட்­சத்­தில் அதன் பாதிப்பு இரண்­டா­வது அலை­யைப் போல் மோச­மாக இருக்­காது என டெல்லி எய்ம்ஸ் மருத்­து­வ­மனை இயக்­கு­நர் மருத்­து­வர் ரந்­தீப் குலே­ரியா தெரி­வித்­துள்­ளார்.

இரண்­டா­வது அலை­யின்­போது கற்ற பாடத்­தைப் படிப்­பி­னை­யா­கப் பின்­பற்­றி­னால் மூன்­றா­வது அலையை எதிர்­கொள்ள இய­லும் என்று பேட்டி ஒன்­றில் அவர் கூறி­யுள்­ளார்.

இதற்கிடையே கேர­ளா­வில் சனி, ஞாயிறு முழு ஊர­டங்கு நீடிக்­கும் என அம்­மா­நில அரசு அறி­வித்­துள்­ளது.

கொரோனா முதல் அலை­யில் 748 மருத்துவர்களை இழந்த நிலையில் , இரண்­டா­வது அலை­யில் 776 மருத்­து­வர்­கள் உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக இந்­திய மருத்­துவ சங்­கம் தெரி­வித்­துள்­ளது.